கோவை குண்டு வெடிப்பு: அரசுக்கு தற்கொலை எச்சரிக்கை
கோயம்புத்தூர்:
கோவை தொடர்குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை 15நாட்களுக்குள் விடுதலை செய்யாவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று அவர்களது உறவினர்கள்எச்சரித்துள்ளனர்.
கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 50க்கும்மேற்பட்டோர் பரிதாபமாகப் பலியாயினர்.
இது தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில்பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்யவேண்டுமென்றும் கைதானவர்களின் உறவினர்கள் தமிழகஅரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இந் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,"கோவை பெண்கள் நல்வாழ்வு அமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பைச்சேர்ந்தவர்கள் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 167 பேரில் 71 பேர் அப்பாவிகள். அவர்களுக்கும், குண்டுவெடிப்புக்கும்எந்த சம்பந்தமும் இல்லை.
அவர்கள் மீது முக்கியமான வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் மீது சாதாரண வழக்கு விசாரணையேநடைபெற்று வருகிறது.எந்தத் தவறும் செய்யாமல் சிறை தண்டனை அனுபவித்து வரும் 71 பேரையும் விடுதலை செய்யக் கோரிமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் முறையிட்டோம்.
ஆனால் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடந்த 7 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்துவரும் அவர்களை 15 நாட்களுக்குள் விடுதலை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அனைவரும் குடும்பத்தோடுதற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications