பாக். கடற்படையிடம் சிக்கிய 9 குமரி மீனவர்கள்!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரின் சித்திரவதையிலிருந்து விடுபட்டு சொந்தஊர் திரும்பியுள்ளனர். மேலும் 9 மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினர் பிடியில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் பியாரி, ஷரோன் என்ற இரு படகுகளில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி அரபிக் கடலில்மீன் பிடிக்கச் சென்றனர்.

மகாராஷ்டிர-குஜராத் கடல் பகுதியில் மீன் பிடிக்க எண்ணிய அவர்கள் பாதை மாறி தவறுதலாக பாகிஸ்தான் கடல் எல்லைக்குள்புகுந்து விட்டனர். இதையடுத்து அவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டனர்.

பாகிஸ்தான் கடற்படையினர் அவர்களை கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். உடலில் வெட்டுக் காயங்களை ஏற்படுத்திஅதில் மிளகாய்ப் பொடியைத் தடவி கொடுமைப்படுத்தியுள்ளனர். சித்திரவதைக்குப் பின்னர் அவர்களில் 8 பேரை மட்டும்விடுவித்துள்ளனர். அவர்களது ஷரோன் படகு மட்டும் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

பியாரி படகையும் அதிலிருந்த காஸ்மோன், இனிகோ, மாராய் தாசன், கிறிஸ்துராஜன், மில்டன்ஜெப்பி, ஆரோக்கியதாஸ்,தோபியாஸ், இன்னொரு இனிகோ, அந்தோணி ஆகிய 9 மீனவர்களையும் பாகிஸ்தான் கடற்படையினர் தங்களது பிடியில்வைத்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட 8 மீனவர்களும் செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் வந்து சேர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்டஆட்சித் தலைவர் சுனில் பாலிவாலுக்குத் தகவல் தரப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜூட் ஆம்ஸ்ட்ராங் தூத்தூர் கிராமம்சென்றுள்ளார்.

மீனவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு தூத்தூர் ஆழ்கடல் மீனவர்கள் சங்கத்தினர் புகார் மனுஅனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+