மதானியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
சென்னை:
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல்நாசர் மதானியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1998ம்ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 50க்கும்மேற்பட்டோர் இறந்தனர். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக மதானி, அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷாஉள்ளிட்ட 167 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள்ளேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தன்னை ஜாமீனில் விடுக்கக் கோரி மதானி பலமுறை மனு தாக்கல் செய்தார்.அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவதற்காக ஜாமீனில் விடுதலைசெய்யுமாறும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதானி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி தணிகாச்சலம் விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில், மதானியை ஜாமீனில் விடுவித்தால்அவர் தப்பி ஓடி விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மதானியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தார்.












Click it and Unblock the Notifications