தமிழ் பாதுகாப்பு இயக்க மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள மொழிப் போர் மாநாட்டிற்கான ஏற்பாடுகள்தீவிரமாக நடந்து வருகின்றன.
இது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியதாவது:
தமிழ் மொழியை ஆட்சி மொழியாகவும், பயிற்றுமொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்க வேண்டும் என்னும்கோரிக்கைகள் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது.
அவ் வியக்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விளக்கக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாடு முழுவதும் பயணம் சென்று மக்களிடையே கருத்துப் பரப்புரை நடத்துவதென்றும்,முடிவாகத் திருச்சி அருகில் உள்ள பொன்மலைத் திடலில் மாபெரும் போராட்ட அறிவிப்பு மாநாடு நடத்துவதென்றும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் (22.3.2005), நான்கு திசைகளிலிருந்தும் ஊர்திப் பயணங்கள் புறப்பட்டுத், தமிழகமெங்கும் பயணம் செய்துஐந்தாவது நாள் (26.3.2005) அனைத்துக் குழுக்களும் திருச்சி மாநாட்டுத் திடலை வந்தடைகின்றன.
இப்பயணத்திற்குத் ""தமிழ்ப் பாதுகாப்புப் பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் குழுவிற்குப்பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையேற்கிறார். திமுக தலைவர் கருணாநிதி பயணத்தைத் தொடக்கிவைக்கவுள்ளார்.
புதுவையிலிருந்து புறப்படும் குழுவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன்தலைமையேற்கிறார். புதுவை முதல்வர் ரங்கசாமி பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.
கோபிச் செட்டிப்பாளையத்திலிருந்து புறப்படும் குழுவிற்கு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன்தலைமையேற்கிறார். தணிக்கையாளர் இளமுருகு முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இந்தப் பயணத்தைத்தொடக்கி வைக்கிறார்.
கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் குழுவிற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் டாக்டர் சேதுராமன்தலைமையேற்கிறார்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் நல்லகண்ணு இநத்ப் பயணத்தைத் தொடக்கி வைக்கிறார்.
நான்கு குழுக்களின் பயணத்திலும் ஒரே மாதிரியான முழக்கங்கள் எழுப்பப்படவுள்ளன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்நோக்கங்களையும், இவற்றிற்கான நியாயங்களையும் விளக்கி, ஊர்வலப் பாதையெங்கும் துண்டறிக்கைகள் வழங்கதிட்டமிடப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் எந்தவிதமான வன்முறை முழக்கங்களுக்கோ, வன்முறைச் செயல்களுக்கோ இடமிருக்காது, முற்றிலும் அறவழிப்போராட்டப் பயணமாக விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெறும் மாநாட்டின் இறுதியில், போராட்டச் செயல்திட்டங்கள் அறிவிக்கப்படும்.
தமிழ்ப் பாதுகாப்புப் பயணம்-மாநாட்டிற்காக கீழ்க்காணும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு வரவேற்புக் குழு:
டாக்டர் ராமதாஸ், தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், டாக்டர் சேதுராமன், இளமுருகு, சோழநம்பியார் (இயக்கஒருங்கிணைப்பாளர்), டாக்டர் தமிழ்வேந்தன் (இயக்கச் செயலாளர்), இளங்குமரனார், டாக்டர் தெய்வநாயகம், மணியரசன்,திருச்சி செளந்தர்ராசன், புலவர் இறைக்குருவனார், புலவர் கி.த.பச்சையப்பன், முனைவர் தமிழப்பனார், முனைவர் அருளி, தியாகு,முனைவர் அரசேந்திரன்.
பயண நிதிக்குழு:
டாக்டர் சேதுராமன், இளமுருகன், அ.கி.முத்து, செல்வப்பெருந்தகை, தமிழ்முழக்கம் சாகுல் அமீது, ஓவியர் சந்தானம்
பயண ஒருங்கிணைப்புக் குழு:
கோ.க.மணி, மீசை. சோமு, பத்மநாபன், வன்னியரசு, கு.சந்திரசேகரன், முகம் மாமணி.
மாநாட்டுப் பணிக்குழு:
இளங்குமரனார், பிரபாகரன், கேசவ.இராமலிங்கம், மணிவேல், கலைச்செல்வி , வழக்கறிஞர் பழ. ஆனந்தன், வீர. செங்கோடன்,மெய்.பெரியசாமி, பேரறிவாளன் ஆகியோர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications