தமிழகம்: நிலத்தடி நீர் அபாயகரமான அளவில் குறைகிறது
டெல்லி:
தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு கடந்த 10 ஆண்டுகளில், வெகுவாக குறைந்துவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம்கூறியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 20 செமீ என்ற அளவுக்கு நிலத்தடி நீர் குறைந்துவிட்டதாக வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நகரங்களின் விரிவாக்கம், மக்கள் பெருக்கம், தொழிற்சாலைகள், விவசாயத்திற்காக அதிக அளவு தண்ணீர் தேவைப்படுவது,பயிரிடும் முறையில் உள்ள குறைபாடுகள், போதிய மழையின்மை ஆகியவையே நிலத்தடி நீர் இருப்பு இந்த அளவுக்கு குறைந்துவருவதற்கு முக்கியக் காரணங்கள் என்று நிலத்தடி நீர் வாரியம் கூறியுள்ளது.
மழை நீர் சேமிப்பு வடிகால் வசதியை ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.
மழை நீர் வடிகால் வசதியை ஊக்குவிப்பதற்காக, அதை ஏற்படுத்தியிருப்போருக்கு சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம்என்றும் மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications