ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது!
சென்னை:
இலக்கிய உலகின் ஜாம்பவான் ஜெயகாந்தன், 2002ம் ஆண்டுக்கான ஞான பீட விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனி இடம் கொண்டுள்ள ஜெயகாந்தன், இந்திய இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக 2002ம் ஆண்டின்ஞானபீட விருது பெறத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக, விருதுக் குழுவின் நடுவரான டாக்டர் எல்.எம்.சிங்க்வி புதுடெல்லியில் தெரிவித்தார்.
ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, பாராட்டுப் பத்திரம், வேகதேவியின் வெண்கலச் சிலை ஆகியவற்றை பரிசாகக் கொண்டது ஞானபீட விருது.
இலக்கிய உலகின் உயரிய பரிசாக கருதப்படும் ஞானபீட விருதைப் பெறும் இரண்டாவது தமிழர் ஜெயகாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மு ன்பு கடந்த1975ம் ஆண்டு அகிலன் இந்த விருதைப் பெற்றிருந்தார்.
தேசிய அளவில் வழங்கப்படும் பல விருதுகள், பாராட்டுக்கள் தமிழர்களுக்கு எப்போதுமே தாமதமாகவே வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில்எப்போதோ விருது கொடுத்துக் கெளரவித்திருக்கப்பட வேண்டிய ஜெயகாந்தனுக்கு, ஞான பீட விருது வெகு தாமதமாக வந்து சேர்ந்துள்ளது.
விருது குறித்து ஜெயகாந்தன் கருத்து தெரிவிக்கையில், ஞானத்தையே பீடமாகக் கொண்டவனுக்கு பீடம் எதற்கு? இது அங்கீகாரம் அல்ல, ஏற்கனவே கிடைத்தஅங்கீகாரத்தை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். எனது வாசகர்கள் ஏற்கனவே பாராட்டி, அங்கீகரித்து விட்டார்கள். அதுதான் எனக்கு உண்மையான விருது.அவர்களுக்கு எனது நன்றிகள்.
இந்த விருதால் தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். விருது தாமதமாக கிடைத்துள்ளது என்று கூறக் கூடாது. இந்திய இலக்கியத்திற்கு நான்ஆற்றிய பணிக்காக விருது கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். இந்திய இலக்கியத்திற்கு நான் ஏதோ சிறிதளவுக்கு செய்துள்ளேன் என்றுதானே இதற்குஅர்த்தம்? அதில் எனக்கு சந்தோஷம்தான். இதில் லேட்டாக கிடைத்து விட்டது, சீக்கிரமே கொடுக்கப்படவில்லை என்று கூறத் தேவையில்லை என்றார்ஜெயகாந்தன்.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ஜெயகாந்தனுக்கு இப்போது வயது 70.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications