காவிரி டெல்டா மாவட்டம்: மணிசங்கர் அய்யர் கோரிக்கை
கும்பகோணம்:
மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவடத்தை அமைக்க வேண்டும் என மத்தியபெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை எம்.பியான மணிசங்கர் அய்யர் கும்பகோணத்தில் காவேரி நகரில் தனது அலுவலகத்தின் கிளையைத்திறந்துள்ளார்.
இந்த அலுவலகத் திறப்பு விழாவில் அய்யர் பேசியதாவது:
வரும் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றம் ஏற்படும். திமுகதான் ஆட்சியைஅமைக்கும்.
இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னர் திருவாரூர், தஞ்சை மாவட்டங்கள் போக மிச்சமுள்ள காவிரி டெல்டா பகுதிகளைஒன்றிணைத்து புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். அதற்கு கும்பகோணம் அல்லது மயிலாடுதுறையை தலைநகராக்கலாம்.
காவிரிப்பூம்பட்டினத்தில் ஆரம்பித்து திருவையாறு வரை காவிரி டெல்டா தான். திருவாரூர், தஞ்சையில் அடங்காத இந்தப்பகுதிகளைக் கொண்ட புதிய மாவட்டம் அமைந்தால் இப் பகுதியின் பொருளாதார வளர்ச்சி பெரும் உதவியாக இருக்கும்.
இங்கே புதிதாக எம்பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் மக்கள் தரும் மனுக்களை வாங்கி அதன் மீது தகுந்தநடவடிக்கையை எடுக்க வேண்டும். மனுவை கிழித்தெறியக் கூடாது.
மயிலாடுதுறையில் எனது எம்பி அலுவலகம் கடந்த 5 வருடமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு நயா பைசா லஞ்சம்வாங்குவதில்லை. மக்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்கள் அந்த அலுவலகத்தை நடத்தும் காங்கிரஸ் தொண்டர்கள். அதேமாதிரியான நல்ல பெயரை இந்த அலுவலகமும் எடுக்க வேண்டும்.
கட்சி பாகுபாடு பார்க்காமல் குறைகளை, கோரிக்கைகளை வைக்கும் மக்களுக்கு உதவ வேண்டும். இந்த அலுவலகம் மூலம்குடவாசல், நாச்சியார்கோவில், திருவிடைமருதூர், திருப்பானந்தாள் ஆகிய பகுதி மக்கள் பயனடைவார்கள் என்றார் மணிசங்கரஅய்யர்.












Click it and Unblock the Notifications