சட்டசபை: எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டசபையிலிருந்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று வெளிநடப்பு செய்தன.
சட்டசபையில் இன்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அப்போது திமுக உறுப்பினர்கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில்,
மணல் குவாரிகளை ஏலம் விடுவதில் முறைகேடு, காலியாக உள்ள பொதுப் பணித்துறை ஊழியர் பணியிடங்களை நிரப்பாமல்உள்ளது குறித்துப் பேசினார்.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலைதர வேண்டும் என்று கோரி அவர் பேச முயலுகையில், அதற்கு அவைத் தலைவர் காளிமுத்து அனுமதி மறுத்து அமரச் சொன்னார்.
அப்போது எழுந்த திமுக சட்டமன்றத் துணைத் தலைவரான துரைமுருகன், பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை இந்த அரசுநிறைவேற்றவில்லை. இந்த விஷயத்தில் மாநில அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பொன்னையன், நேரடியாக பதிலளிக்காமல் சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தார். இந்தவிவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது என்றார். மீண்டும் வேலை தருவதுகுறித்து உறுதிமொழி எதையும் அவர் அளிக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து சாலைப் பணியாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்புசெய்தனர். இதனால் பாஜக மற்றும் அதிமுக ஆதரவு பார்வர்ட் பிளாக் கட்சியினர் தவிர வேறு எதிர்க் கட்சியினர் யாரும் அவையில்இல்லை.
இந் நிலையில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா எழுந்து, ஜெயேந்திரர் தொடர்பாக பேச முயன்றார். ஆனால், அதற்கும் காளிமுத்து
அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து பாஜகவினரும் வெளிநடப்புச் செய்தனர்.வெளியில் வந்த ராஜா நிருபர்களிடம் பேசுகையில்,
சங்கர மடத்தின் வழக்கு செலவுகளுக்காக நிதி திரட்டிய டாக்டர் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பியது காஞ்சி போலீஸ். இதைஎதிர்த்து பாஸ்கரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், இந்த காஞ்சி வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றவிரும்புவதாகக் கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழகத்தில் நீதிமன்றங்கள் சுயேச்சையாக செயல்பட முடியவில்லை என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக நான்கொடுத்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து ஏற்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications