ஜெமினி கணேசன் மரணம் !
சென்னை:
![]() |
சென்னையில் நேற்று நள்ளிரவு மரணமடைந்த பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் (வயது 85) உடல் பெசன்ட்நகர் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
கடந்த ஒரு வருடமாகவே உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தஜெமினி கணேசன் சமீபத்தில்தான் வீடு திரும்பினார். அவரை முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று நலம்விசாரித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜெமினிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகளான டாக்டர்கமலா செல்வராஜ் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் இன்று அதிகாலை 1.30மணிக்கு ஜெமினி கணேசன் மரணமடைந்தார்.
இதுகுறித்து கமலா செல்வராஜ் கூறுகையில், நேற்று இரவு அப்பாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைஅளித்தோம். இருப்பினும் சிகிச்சை கேட்கவில்லை.
இன்று அதிகாலை அமைதியான முறையில் அவர் மரணமடைந்தார். உயிர் பிரிந்தபோது, குடும்பத்தார்அனைவரும் கூடவே இருந்தோம் என்றார்.
ஜெமினியின் மறைவுச் செய்தி கேட்டதும், திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அவரது நுங்கம்பாக்கம்வீட்டுக்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வெளியே வந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிவடைந்துவிட்டது. காதல் படங்கள், சரித்திரப் படங்கள், சமூகப் படங்கள் என சகலவிதமான படங்களிலும் சிறப்புறநடித்துள்ளவர் ஜெமினி. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும் என்றார்.
ஜெமினியின் உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் உடல் தகனம் செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாகஎடுத்துச் செல்லப்பட்டது.
மாலை 3.45 மணியளவில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் ஜெமினியின் உடல்தகனம் செய்யப்பட்டது. ஒரே மகனான விஜய சதீஷ் அமெரிக்காவில் இருப்பதால் அவருக்குப் பதிலாகஜெமினியின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை அவரது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் செய்தார்.













Click it and Unblock the Notifications