ஜெமினி மறைவு: ஜெ. துயரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெமினிக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஜெயலலிதா

பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் உடல் முழு போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

ஜெமினியின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தென்னகத் திரையுலகில் ஒளி வீசிக் கொண்டிருந்த ஜெமினிகணேசனின் மறைவு செய்தி கேட்டு ஆட்கொணா துயரம் அடைந்தேன், வருத்தம் அடைந்தேன்.

ஜெமினிக்கு அஞ்சலி செலுத்திய நடிகை கே.ஆர்.விஜயா

திரையுலகில் கோலோச்சிப் பறந்து கொண்டிருந்த ஜெமினியின் மறைவின் மூலம் திரையுலகின் சகாப்தம் முடிவடைந்துள்ளது.வஞ்சிக் கோட்டை வாலிபன், கல்யாணப் பரிசு, மிஸ்ஸியம்மா, பாத காணிக்கை, பாசமலர் ஆகிய படங்களை யாரால் மறக்கமுடியும்?

புகழேணியின் உச்சியில் இருந்தாலும், அடக்கத்துடன் இருந்தார். மென்மையான நடிப்பு மட்டுமன்றி, உண்மையான நட்புக்கும்மதிப்பு கொடுத்தவர். என் மீதும் எனது தாயார் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.

அவரை எனது சிறு வயது முதலே எனக்கு நன்கு தெரியும். ஜெமினி கணேசனைப் போல இன்னொருவர் பிறக்க முடியாது.

அவரது மறைவு, தென்னக திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பதினரின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன்.

ஜெமினியின் உடல் முழு அரசு மரியாதைகளுடன் தகனம் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

முன்னதாக ஜெமினியின் உடலுக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த்,பிரபு, நடிகைகள் மனோரமா, கே.ஆர்.விஜயா, வைஜெயந்தி மாலா, அஞ்சலி தேவி, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டதிரையுலகினரும் ஜெமினி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+