சங்கராச்சாரியார்: நிதி திரட்டிய டாக்டருக்கு அனுப்பப்பட்ட சம்மன் ரத்து
சென்னை:
சங்கராச்சாரியாரின் வழக்கு செலவுகளுக்கு நிதி திரட்டி, சங்கர மடத்தின் பக்தரான டாக்டர் பாஸ்கருக்குஅனுப்பப்பட்ட சம்மனை போலீசார் ரத்து செய்துவிட்டனர்.
இத் தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்தார்.
ஜெயேந்திரர் மீதான வழக்குகளை நடத்த மடத்துக்கு நிதி திரட்ட சென்னையைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கர் என்பவர்இணைய தளம் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து அவரை விசாரணைக்கு வருமாறு கூறி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் சமமன் அனுப்பினர்.
இதை எதிர்த்து டாக்டர் பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவசுப்பிரமணியம் தனிப்படை போலீஸாருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை விட்டுவிட்டு போலீசார் எங்கெங்கோ போய்க்கொண்டிருப்பதாகவும், இதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி காட்டமாகக் கூறினார்.
இந் நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரானவழக்கறிஞர் துரைசாமி, டாக்டர் பாஸ்கர் மீதான சம்மன் ரத்து செய்யப்படுவதாகவும், இதன் மீது மேல் நடவடிக்கைஏதும் இருக்காது என்றும் உறுதிமொழி அளித்தார்.
இதைத் தொடர்ந்து டாக்டர் பாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications