அமெரிக்காவில் பள்ளி மாணவன் துப்பாக்கி சூடு: மாணவ, மாணவிகள் உள்பட 9 பேர் பலி
மின்னசோட்டா:
அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் பள்ளி மாணவன் தனது தாத்தா, பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுதன்னுடன் பயின்ற 5 மாணவ, மாணவிகளையும், ஆசிரியரையும், பள்ளியின் காவலாளியையும் சுட்டுக் கொன்றான்.
தன்னைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாருடனும் அவன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டான். இதையடுத்து தன்னைத் தானேஅவன் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்தத் தாக்குதலில் 15 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர்.
மின்னசோட்டாவின் ரெட்லேக் ஹை ஸ்கூலில் இச் சம்பவம் நடந்தது. தாக்குதலை நடத்திய மாணவனின் பெயர் ஜெப்.
முதலில் தனது வீட்டில் தாத்தாவையும் பாட்டியையும் சுட்டுக் கொன்ற ஜெப் பின்னர் ஆவேசத்துடன் பள்ளிக்கு வந்துள்ளான்.
அவனிடம் இரண்டு கைத்துப்பாக்கிகளும், ஒரு ஷாட் கன் துப்பாக்கியும் இருந்தது.
பள்ளிக்கு வந்தவன் முதலில் காவலாளியை சுட்டுக் கொன்றான். பின்னர் வெறியுடன் மாணவ, மாணவிகள் மீது துப்பாக்கிச் சூடுநடத்தினார். தங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டிய ஜெப்பிடம் மாணவ, மாணவிகள் உயிர்ப் பிச்சை கேட்டு மன்றாடியுள்ளனர்.ஆனால், அவ்களை சரமாரியாக சுட்டுள்ளான் ஜெப். இதில் 5 மாணவ, மாணவிகள் பலியாயினர்.
அப்போது தன்னைத் தடுக்க முயன்ற ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.
இதையடுத்து பள்ளியை ரெட்லேக் போலீசார் சுற்றி வளைத்தனர். ஜெப்பை சரணடையும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஆனால், அவர்கள் மீதும் ஜெப் சுட்டான். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுடவே, வகுப்பறைக்குள் ஓடிய ஜெப் அங்கு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
எதற்காக இந்தத் தாக்குதலை ஜெப் நடத்தினான் என்று தெரியவில்லை என எப்.பி.ஐ. காவல் படையின் செய்தித் தொடர்பாளர்மின்னபோலிசில் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் நடந்துள்ள மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடுசம்பவம் இது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications