வீரப்பன் வதம்: டிஆர்ஓ விசாரணை முடிந்தது
தர்மபுரி:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்டது தொடர்பாக நடந்து வந்த தர்மபுரி மாவட்டகோட்டாட்சியர் விசாரணை முடிவடைந்தது.
வீரப்பனையும், அவனது கூட்டாளிகளையும் தமிழக அதிரடிப்படையினர் கடந்த அக்டோபர் 18ம் தேதி சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக டி.ஆர்.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த நவம்பர் 1ம் தேதி தனதுவிசாரணையை டி.ஆர்.ஓ. பிரகாசம் தொடங்கினார்.
அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், பொதுமக்கள் 100 பேர், வீரப்பனால் பாதிக்கப்பட்டவர்கள், வீரப்பனின்மனைவி முத்துலட்சுமி, சகோதரிகள், கர்நாடக அதிரடிப்படையினர் 44 பேர், தடய அறிவியல் அதிகாரிகள்,பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள் உள்ளிட்ட 196 பேரிடம் டி.ஆர்.ஓ பிரகாசம் விசாரணை நடத்தினார்.
வீரப்பன் கும்பல், அதிரடிப்படையினர் பயன்படுத்திய 38 துப்பாக்கிகள், வீரப்பனின் உடமைகள் உள்ளிட்டவையும்டி.ஆர்.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
டி.ஆர்.ஓவின் இந்த விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது. விசாரணை தொடர்பான அறிக்கையை இந்த மாதஇறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால் வரும் 31ம் தேதிக்குள் டி.ஆர்.ஓ. அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications