பெரியவர், இளையவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகல் தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டதாகத் தெரிகிறது. அனேகமாகநாளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நகல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஜெயேந்திரர், விஜயேந்திர்ர உள்ளிட்ட 5 பேர்ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ரவிசுப்ரமணியம் அப்ரூவராக உள்ளார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தனிப்படை போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீது கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 1,873 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கையின் நகலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குவழங்குவதற்காக நகல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது.
2 முறை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும் வழங்கப்படவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நீதிமன்றஊழியர்களால், குற்றப் பத்திரிக்கையின் நகல் தயாக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
ஜெராக்ஸ் எடுக்கும்போது ஜெராக்ஸ் இயந்திரம் பழுதடைந்ததால், சென்னையிலிருந்து இன்னொரு இயந்திரம் கொண்டுவரப்பட்டு பிரதிகள் எடுக்கப்பட்டு வந்தன. தற்போது நகலெடுக்கும் பணி முடிவடைந்து பைண்டிங் வேலை நடந்துகொண்டுள்ளது. இன்று இரவுக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது.
இந் நிலையில் வழக்கு தொடர்பாக நாளை ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில்ஆஜராகின்றனர். அப்போது குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாமீனில் விடுதலையாகிருக்கும் 5 பேர் மற்றும் ரவி சுப்பிரமணியம் ஆகியோரைத் தவிர மற்றவர்களுடைய சிறைக் காவலும்நாளை நீட்டிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications