போலீஸாருக்கு மேலும் சலுகைகள்: அள்ளி வழங்கும் ஜெ.
சென்னை:
தமிழக போலீஸாருக்கு மேலும் பல சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் காவல்துறையினருக்கு சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் இன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 15ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து நான் பேசுகையில், நாட்டின்வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை என்பதை விளக்கியிருந்தேன்.
எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதியான சூழ்நிலையைஉருவாக்குவதிலும், அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி முக்கியமானது.
தமிழக மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை உறுதி செய்திட தமிழக காவல்துறை 24 மணி நேரமும் ஆயத்த நிலையிலேயேஇருக்கிறது.
காவலர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்கள் என்றும், ஒரு நாள் வார விடுமுறை நாள் என்றும் உள்ளபோதும், சட்டம்ஒழுங்குப் பிரச்சினை, வழக்குகள் புலன் விசாரணை, வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களுக்கு சென்று வருதல் என பல்வேறுபணிகள் காரணாக சில நேரங்களில் வார விடுமுறையை காவலர்கள் துய்க்க முடியாத நிலை உள்ளது.
அவ்வாறு வார விடுமுறை நாட்களிலும், தவிர்க்க இயலாத காரணங்களால் பணி மேற்கொள்ளும் காவலர், முதல் நிலைக் காவலர்மற்றும் தலைமைக் காவலர் ஆகியோருக்கு விடுமுறை அன்று பணி செய்தமைக்கு ஈடாக வார விடுப்பு ஈட்டுப்படி வழங்கப்பட்டுவருகிறது.
50 ரூபாயாக இருந்த இந்த வார விடுப்பு ஈட்டுப்படியை, நாள் ஒன்றுக்கு ரூ. 100 ஆக உயர்த்தி கடந்த 2002ம் ஆண்டுஆணையிட்டேன். அதன்படி தற்போது இவர்கள் வார விடுப்பு ஈட்டுப் படியாக 100 ரூபாய் பெற்று வருகின்றனர். இதை தற்போதுஉயர்த்தி வழங்க நான் முடிவெடுத்துள்ளேன்.
அதன்படி, காவலர், முதல் நிலைக் காவலர், தலைமைக் காவலர் ஆகியோருக்கு வார ஈட்டுப் படியாக நாள் ஒன்றுக்கு தற்போதுவழங்கப்பட்டு வரும் 100 ரூபாயை ரூ. 150 ஆக உயர்த்த உத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் நிலைய அலுவலர் நிலைக்குக் கீழ் உள்ள பணியாளர்களுக்கு வாரவிடுப்பு ஈட்டுப் படியாக நாள் ஒன்றுக்கு ரூ 100 வழங்கப்பட்டு வருகிறது. அதை நாள் ஒன்றுக்கு ரூ. 150 ஆக உயர்த்திஉத்தரவிட்டுள்ளேன்.
அதேபோல காவலர் முதல் தலைமைக் காவலர் நிலை வரை உள்ள பணியாளர்களுக்கு மாதம் ரூ. 40 சீருடைப் படி வழங்கப்பட்டுவருகிறது. உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ஆகியோருக்கு ரூ. 50ம், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்கள், இந்தியக் காவல் பணி அல்லாத காவல் கண்காணிப்பாளர்களுக்கு ரூ. 60 வழங்கப்படுகிறது. இவையும்உயர்த்தப்படுகிறது.
காவல்துறையில் பணியாற்றும் காவலர் நிலை முதல் இந்தியக் காவல் பணி அல்லாத காவல் கண்காணிப்பாளர் நிலை வரை உள்ளஅனைவருக்கும் ஒரே அளவாக மாதம் ரூ. 100 சீருடைப் படி வழங்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையில் உள்ள தீயணைப்போர் முதல் கோட்ட அலுவலர் வரை உள்ளவர்களுக்கு அவரவர்நிலைக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ. 40 முதல் ரூ. 60 வரை சீருடைப் படி வழங்கப்படுகிறது. இனிமேல் அனைத்துப்பணியாளர்களுக்கும் மாதந்தோறும் ஒரே அளவாக ரூ. 100 வழங்கப்படும்.
அதேபால, தீயணைப்புப் படையினருக்கும் பணியில் ஈடுபடும்போது உணவுப்படி வழங்கப்படுறது. இந்தப் படி ரூ.55 ஆகஉயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உயர்த்தப்பட்ட வார விடுப்பு ஈட்டுப்படி, சீருடைப்படி, உணவுப் படி ஆகியவற்றின் உயர்வால் அரசுக்கு ஆண்டுக்குமொத்தம் ரூ. 36.18 கோடி கூடுதல் செலவாகும் என்றார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications