கைது செய்வதை தவிருங்கள்: ஜெவுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
சென்னை:
மாணவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும் ஆசிரியர்களை போலீஸார் கைது செய்வதை தவிர்க்க வேண்டும்என முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக நர்சரி, தொடக்கப் பள்ளி, மெட்ரிகுலேஷன் பள்ளி, உயர்நிலைப் பள்ளிமற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஜெயலலிதாவுக்குகோரிக்கைக் கடிதமாக அனுப்பி வைக்கப்பட்டுளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கிறிஸ்துதாஸ் கூறுகையில்,
தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள் திட்டுவது சாதாரண விஷயம். இதற்காக வீட்டை விட்டுஓடும் மாணவர்களும், தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அப்பாவிஆசிரியர்களும், பெற்றோர்களும் பொறுப்பில்லை.
பள்ளியை விட்டு விட்டு ஓடும் மாணவர்களுக்காக தவறு செய்யாத ஆசிரியர்கள், பள்ளி தாளாளர்களைக் கைதுசெய்வது நியாயமல்ல. போலீஸ் நடவடிக்கை, வழக்கு இவற்றுக்குப் பயந்து பல ஆசிரியர்கள் தற்போது தங்களதுகடமையிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர். மாணவர்களை கண்டிப்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.
இதனால் தவறு செய்யும் மாணவர்களுக்கு இன்னும் வசதியாகி விடுகிறது. இது மாணவர்களின் நலனுக்குஉகந்ததல்ல.
இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக ஆசிரியர்களைக் கைது செய்வதை தவிர்த்து, உரிய விசாரணைகளுக்குப்பிறகு தவறு செய்தவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கைவிடுத்துள்ளோம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications