மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை.. விற்கப்பட்ட குழந்தை.. விபச்சாரத்துக்கு தள்ள முயன்ற தம்பதி..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Mythiliமகளை கர்ப்பிணியாக்கிய தந்தையையும், அந்தப் பெண்ணின் குழந்தையை விற்றதோடு, அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தமுயன்ற தம்பதியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஏழுகிணறு வடமலை மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்குமைதிலி (வயது 18) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மகன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

சுப்பிரமணியன் புரோகிதர் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். தாயையும், ஒரே அண்ணனையும் இழந்த மைதிலி, தனதுதந்தையின் ஆதரவில் இருந்துவந்தார்.

வறுமை காரணமாக 8வது வகுப்பு வரை மட்டுமே படித்த மைதிலி, ஏழ்மையையும் மீறிய அழகாக இருக்க, அதுதான் அவரதுவாழ்க்கையின் முதல் எதிரியானது.

சுப்பிரமணியன் வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் தோபியாசின் மனைவி மல்லீஸ்வரி, மைதிலியிடம் மிகவும் அன்பொழுகபேசுவாராம். இவரால் தனது வாழ்க்கை சின்னா பின்னமாகப் போகிறது எனத் தெரியாமல் மைதிலியும் கள்ளம் கபடமில்லாமல்மல்லீஸ்வரியுடன் பழகியுள்ளார்.

இந் நிலையில் ஒரு நாள் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது மைதிலியின் வயிறு சற்றுப் பெரிதாக இருப்பதைகவனித்த மல்லீஸ்வரி, "உன்னுடைய வயிறு ஏன் பெரிதாக இருக்கிறது? என்று கேட்டுள்ளார்.

அதற்கு, "என் தந்தையின் செக்ஸ் விளையாட்டால் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று மைதிலி கூறியுள்ளார். இதைக் கேட்டுஅதிர்ச்சியடைந்த மல்லீஸ்வரி, மைதிலியின் தந்தையிடம் விவரத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், மைதிலி ஒரு வாலிபரிடம் ஏமாந்ததால் தான் கர்ப்பமாக இருக்கிறாள் என்றும் இதை நான் கண்டித்ததால் என் மீதேஅவள் பழி போடுகிறாள் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் மைதிலியின் வயிற்றில் குழந்தை வளர ஆரம்பித்தது. அப்போது தான் மல்லீஸ்வரி தனது திட்டத்தை செயல்படுத்ததொடங்கினார்.

அவர் மைதிலியிடம், "நீ குழந்தை பெறுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நான் செய்கிறேன். குழந்தை பிறந்ததும் அதை யாருக்காவதுவிற்றுவிடுவோம். அதன் பிறகு நீ யாரையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை மைதிலிநம்பிவிட்டார்.

குழந்தையும் பிறந்தது. கொழு கொழுவென அழகாகப் பிறந்த குழந்தையை சென்னை முகப்பேரை சேர்ந்த மகேஷ்- தஞ்சம்மாள்தம்பதிக்கு ரூ. 15,000க்கு விற்றார் மல்லீஸ்வரி.

இந் நிலையில் குரோம்பேட்டையை சேர்ந்த முரளி-சசிகலா தம்பதியினர் குழந்தைக்காக ஏங்குவதையும், அவர்கள் ரூ. 1 லட்சம்வரைத் தரத் தயாராக இருப்பதையும் அறிந்த மல்லீஸ்வரி, 1 லட்சத்தை வாங்கிக் கொண்டு, மகேஷ்-தஞ்சம்மாள் தம்பதியிடம்இருந்து குழந்தையை வாங்கி வந்து முரளி தம்பதியிடம் இரண்டாவது முறையாக குழந்தையை விற்றுள்ளார்.

இது எதுவுமே மைதிலிக்குத் தெரியாது என்று கூறப்படுகிறது. இந் நிலையில் தந்தையும் அவரை விட்டு விலகிப் போய்விடமல்லீஸ்வரியின் தயவில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் மைதிலி.

குழந்தையை நல்ல விலைக்கு விற்ற மல்லீஸ்வரி, அதற்குப் பிறகு மைதிலியை வைத்து இன்னொரு திட்டம் தீட்டினார்.மைதிலியை விபசாரத்தில் ஈடுபடுத்தினால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு அவரை விபசாரத்திற்குகட்டாயப்படுத்தியுள்ளார்.

"உன் அழகுக்கு அவனவன் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுப்பான் என்று மைதிலியிடம் கூறியுள்ளார். ஆனால் மைதிலிஅதற்கு மசியவில்லை. மல்லீஸ்வரியின் கொடுமை ஒரு புறம் என்றால் அவரது கணவர் தோபியாஸ் மறுபுறம் மைதிலிக்கு செக்ஸ்டார்ச்சர் கொடுக்கத் தொடங்கியுள்ளார்.

தாயை இழந்து, அண்ணனை தொலைத்து, பெற்ற குழந்தையையும் பறிகொடுத்து, தந்தையால் கர்ப்பமாகி, அவரும் ஓடிப்போய்விட்ட நிலையில் விபசார படுகுழியில் விழ விரும்பாத மைதிலி, மல்லீஸ்வரியின் வீட்டிலிருந்து தப்பினார்.

சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு சேட்டு வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வட்டிக் காசில் உடம்பையும் கொழுப்பையும் வளர்த்துவைத்திருந்த சேட்டு வீட்டு ஆண்களாலும் மைதிலிக்கு செக்ஸ் தொல்லை ஏற்படவே, அங்கிருந்து தப்பி ஓடி, ஒரு கிறிஸ்தவதொண்டு நிறுவனத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

இந் நிலையில் மல்லீஸ்வரியிடம் குழந்தைக்காக 15,000 ரூபாய் கொடுத்து ஏமாந்த மகேஷ்-தஞ்சம்மாள் தம்பதி போலீஸில் புகார்கொக்க, போலீஸார் நடத்திய விசாரணையில் தான் மைதிலியின் சோகக் கதை தெரியவந்தது.

மைதிலியின் கண்ணீர்க் கதையைக் கேட்ட போலீஸார் மல்லீஸ்வரி, அவரது கணவர் தோபியாஸ் மற்றும் மைதிலியைகர்ப்பமாக்கிவிட்டு ஓடிப் போன தந்தை சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+