இன்போசிஸ், விப்ரோ அதிபர்களுக்கு பாதுகாப்பு
டெல்லி:
இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி, விப்ரோ அதிபர் ஆஸிம் பிரேம்ஜி, டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி உள்பட நாட்டின் 25 முன்னணி தொழிலதிபர்களுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்குவதுகுறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்தத் தொழிலதிபர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கோரி அந்தந்த மாநில அரசுகளை நாடியுள்ளனர். இது தொடர்பாக மத்தியஅரசுக்கு மாநில அரசுகள் தகவல் கொடுத்துள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய உளவுப் பிரிவானஇன்டெலிஜென்ஸ் பீரோவிடம் இது குறித்து அறிக்கை கோரியுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு இந்த 25 பேரில் தேவையானவர்களுக்குஎக்ஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ரிலையன்ஸ் சொத்து விவகாரத்தில் அண்ணன் முகேஷ் அம்பானியுடன் மோதி வரும் அனில் அம்பானிக்குதொலைபேசியில் மிரட்டல்கள் வர ஆரம்பித்துள்ளதால், பாதுகாப்பு கோரி அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி, மும்பை போலீசாருக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அவர் சமாஜ்வாடிக்கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்பியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications