ஜெயேந்திரர் நீதிமன்றத்தில் ஆஜர்: குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படவில்லை

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Jayendrar with Vijayendrarசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆனால்,இன்றும் குற்றப் பத்திரிகை நகல் வழங்கப்படவில்லை.

இந்தக் கொலை வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 5 பேர்ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறி சிறையில் உள்ளார். மற்றவர்களில் ரகு, சுந்தரேசஅய்யர், கதிரவன் உள்ளிட்ட 18 பேர் சென்னை மத்திய சிறையிலும், அப்பு கடலூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரவி தவிர்த்து குற்றம் சாட்டப்பட்ட 24 பேர் மீதும் கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் தனிப்படைபோலீஸார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். 2 முறை நகல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டும்,வழங்கப்படவில்லை.

இந் நிலையில் இன்று ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்துஜாமீனில் இருக்கும் ஜெயேந்திரர், விஜயேந்திரர், போலிக் குற்றவாளிகள் பழனி, செந்தில்குமார் ஆகிய 4 பேரும் நேரில்ஆஜராயினர். இன்னொரு போலி குற்றவாளியான ஆறுமுகம் ஆஜராகவில்லை.

அப்பு உள்ளிட்ட பிற குற்றவாளிகள் நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை.

அப்போது ஜெயேந்திரரின் சார்பில் அவரது வழக்கறிஞர் தினகரன் ஒரு மனுவை நீதிபதி உத்தமராஜனிடம் தாக்கல் செய்தார்.அதில், சங்கர மடத்தின் வழக்கு செலவுகளுக்காக இன்டர்நெட் மூலம் நிதி திரட்டிய டாக்டர் பாஸ்கரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனால் அந்த வழக்கிலும் ஒரு துணை குற்றப் பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரைசங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்றார்.

இதை எதிர்த்து வாதாடிய அரசு வழக்கறிஞர். டாக்டர் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து அவர்உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவையடுத்து அந்த சம்மன் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இதையடுத்து அவரதுமனுவையே உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் பாஸ்கரன் விவகாரத்துக்கும் சங்கரராமன் வழக்குக்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதனால் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கவேண்டியதில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டாக்டர் பாஸ்கரன் விவகாரத்தை வைத்து சங்கரராமன் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரும் ஜெயேந்திரர் தரப்பு வாதத்துக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்குஉத்தரவிட்டார்.

பின்னர் வீடியோ கான்பரன்சிங் மூலம் குற்றம் சாட்டப்பட்ட 19 பேரின் காவலையும் மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்துஉத்தரவிட்டார். மேலும் மார்ச் 31ம் தேதி ஜாமீனில் வெளியில் இருக்கும் 5 பேர் உள்பட அனைவருமே நீதிமன்றத்தில் நேரில்ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

காஞ்சி துணை சிறையில் அடைக்கப்பட்டு, இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்ட ரவி சுப்பிரமணியத்தையும் 31ம் தேதி நீதிமன்றத்தில்ஆஜராக உத்தரவிட்டார் நீதிபதி.

அனைவரையும் 31ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளதால், அன்றைய தினம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்றுதெரிகிறது.

இப்போது காஞ்சி நீதிமன்றத்திலேயே வீடியோ கான்பரன்சிங் வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டது. முன்பு இதற்காக நீதிபதிசெங்கல்பட்டு நீதிமன்றம் போக வேண்டிய அவசியம் இருந்தது.

குற்றப் பத்திரிக்கை நகல் வழங்குவது தாமதமாவதற்கு அரசுத் தரப்பே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டி வருவதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+