திருச்சியில் இன்று தமிழ்ப் பாதுகாப்பு இயக்க 3வது மொழிப் போர் மாநாடு
திருச்சி:
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 3வது மொழிப் போர் அறிவிப்பு மாநாடு இன்று திருச்சியில் நடக்கிறது.
இதில் பங்கேற்க தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்தும், பாமக நிறுவனர்ராமதாஸ் சென்னையிலிருந்தும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பாண்டிச்சேரியிலிருந்தும், மூவேந்தர்மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் கன்னியாகுமரியிலிருந்தும் ஊர்திப் பயணங்களை மேற்கொண்டுதிருச்சி வந்தனர்.
காலையில் திருமாவளவன் திருச்சியில் பிரமாண்டமான பேரணியை நடத்துகிறார். மாலையில் பொன்மலைத் திடலில் தமிழ்பாதுகாப்பு இயக்க 3வது மொழிப் போர் அறிவிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இதில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் அடுத்த கட்டப் போராட்டங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்றுதெரிகிறது.
தனது ஊர்திப் பயணத்தின்போது விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
அதிமுகவுக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டது. விரைவில் தேர்தல் வரப் போகிறது. அதன் காரணமாகத்தான் ஏராளமானஅறிவிப்புகள் வரிசையாக வந்து கொண்டுள்ளன.
காலியாகவுள்ள இரண்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம்வெளியாகவுள்ளது. ஆனால் பொதுத் தேர்தலையே நடத்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக அரசு காய் நகர்த்திவருகிறது.
அதிமுக அரசு எதிர்பார்க்கும் வகையில் தேர்தல் ன்கூட்டியே வந்தாலும், அதிமுகவால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.ஏனென்றால் அதிமுக மக்களிடையேயும், அரசியல் அரங்கிலும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது.
ஏழை எளியவர்களைச் சுரண்டி கஜானாவை நிரப்பி விட்டு, டாஸ்மாக் மது விற்பனை மூலம் ரூ. 1,500 கோடி கூடுதலாககிடைத்துள்ளதாக தம்பட்டமடிக்கிறார்கள். மது விற்ற வருவாயில், ரூ. 15 கோடிக்கு இலவசப் பாடப் புத்தகங்களை வழங்குவதாகஅறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications