6 தமிழக சிறுமிகள் கொச்சியில் மீட்பு
கொச்சி:
குஜராத்தில் உள்ள இறால் பண்ணைகளில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படவிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6சிறுமிகளை கொச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் மீட்டனர்.
கொச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் நேற்று வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுகுர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பெண்கள் கூட்டமாக அமர்ந்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அனைவரையும் கீழே இறக்கிய போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். தாங்கள் குஜராத் இறால்பண்ணைகளில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்படுவதாக அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களில் 6 பேர் (சந்திரா, கிருஷ்ணம்மா, ராசாத்தி, ஆறுமுககேஸ்வரி, மணிமேகலா, முத்துச்செல்வி) ஆகியோர்சிறுமிகளாக இருந்ததைப் பார்த்த போலீஸார் அவர்களை அழைத்துச் செல்லும் ஏஜென்டு கோபி என்பவரிடம் விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் ஜோசப்பை போலீஸார் கைது செய்தனர். 6 சிறுமிகளும் சிறார் குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
6 சிறுமிகள் தவிர மற்ற 16 பேரிடம் முறையான ஆவணங்கள், வேலையில் சேருவதற்கான உத்தரவுகள் சரியாக இருந்ததால்அவர்களை தொடர்ந்து பயணம் செய்ய போலீஸார் அனுமதித்தனர்.
22 பெண்களும் நெல்லை மற்றும் தென்காசி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications