வழக்கறிஞர் மீது ஜெயலட்சுமி கொலை முயற்சி புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமியை வீடுபுகுந்து கொல்ல முயன்றதாகவும், அவரை மானபங்கம் செய்ததாகவும், அவரது முன்னாள் வழக்கறிஞர்அழகர்சாமி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஏட்டு முதல் எஸ்.பி. வரை தன்னை செக்ஸ் கொடுமைப் படுத்தியதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. இவர்கூறிய புகார்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

தொடக்கத்தில் ஜெயலட்சுமிக்காக வாதாட ஆஜரானவர் வழக்கறிஞர் அழகர்சாமி. ஆனால் ஜெயலட்சுமிக்கும், அழகர்சாமிக்கும்கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து அவரை ஓரம் கட்டினார் ஜெயலட்சுமி.

அதன் பிறகு ஜெயலட்சுமிக்காக வழக்கறிஞர்கள் வெங்கடேசன், ஓம்சேர்மபிரபு ஆகியோர் ஆஜராகி வருகின்றனர். தற்போதுவிசாரணை முடிவடைந்து விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

இந் நிலையில் வழக்கறிஞர் அழகர்சாமி, காரில் நேற்று பகலில் மதுரை எல்லீஸ் நகரிலுள்ள ஜெயலட்சுமி வசிக்கும் வீட்டிற்குசென்றார். அதன் பின் ஜெயலட்சுமி அந்தக் காரை எடுத்துக்கொண்டு ஒரு நர்சை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமானதால் அழகர்சாமி திரும்பிச் சென்றுவிட்டார். பிறகு மாலை திரும்பவும் வந்த அழகர்சாமி, ஜெயலட்சுமியுடன்வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கொருவர் காரசாரமாக பேசிக்கொண்டனர். ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் அவர்களை சமாதானம்செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அப்போது ஜெயலட்சுமியை அழகர்சாமி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதன்பிறகு இரவு 10 மணியளவில் ஜெயலட்சுமி தனது வழக்கறிஞர்களுடன் எல்லீஸ் நகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஒருபுகார் கொடுத்தார். அதில், வக்கீல் அழகர்சாமி இன்று எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னைக் கொல்லாமல்விடமாட்டேன் என்று கூறி தாக்கினார்.

இதனால் என்னுடைய உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. என்னுடைய பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்தபோலீஸாரின் முன் தான் இது நடந்தது.

எனவே என் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய வக்கீல் அழகர்சாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலட்சுமி.

ஜெயலட்சுமியின் இந்தப் புகாரின் பேரில் எல்லீஸ் நகர் போலீஸார் வழக்கறிஞர் அழகர்சாமி மீது கொலை முயற்சி உட்பட 6பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக எல்லீஸ் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் கூறுகையில், ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இரவில் வழக்கறிஞர் அழகர்சாமி மீது புகார் கொடுத்த ஜெயலட்சுமி, காலையில் அவரது காரை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியதுஏன் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+