மதுரை: நடுநடுங்க வைத்த மயானக் கொள்ளை திருவிழா!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை அருகே பேரையூர் கிராமத்தில் நடந்த மயானக் கொள்ளைத் திருவிழா, பார்த்தோரை நடுநடுங்க வைத்தது.

மதுரை அருகே உள்ள பேரையூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஆண்டுதோறும் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறும்.6 நாள் நடக்கும் இந்தத் திருவிழாவுக்கு உசிலம்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம் என சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தஆயிரக்கணக்கானோர் வருகை தருவர்.

திருவிழாவின் 5வது நாள் கொண்டாட்டத்தில் சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. 50 ஆண்டுகளுக்கு முன்புகடைப்பிடிக்கப்பட்டு வந்த சில பழக்கங்களை இந்த ஆண்டு மீண்டும் கடைப்பிடித்தனர்.

நள்ளிரவு, கோவில் முன்பு ஆடு ஒன்று கட்டப்பட்டிருந்தது. கோவில் சாமியாடி, ஆவேசமாக சாமியாடியவாறு வந்து ஆட்டின்கழுத்தைக் கடித்து ரத்தம் குடித்தார்.

அதன் பின்னர் அவர் ஆவேசமாக சுடுகாட்டை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து பக்தர்களும் பின்னாலேயே ஓடினர். அங்குசுடுகாட்டில் கிடந்த எலும்புகள், மண்டையோடுகளை சேகரித்து எடுத்த பக்தர்கள், அதை கையில் பிடித்துக் கொண்டு ஆவேசநடனமாடினர்.

பின்னர் ஆட்டுக்குட்டி, பன்றி, சேவல் ஆகியவை சுடுகாட்டு வளாகத்தில் உள்ள பாதாள ரூபி கோவிலில் பலி கொடுக்கப்பட்டன.அவற்றின் ரத்தத்தை அரிசியில் நனைத்து சுடுகாட்டைச் சுற்றிலும் சாமியாடி தூவினார். இப்படியாக 5வது நாள் திருவிழாவிமரிசையாக நடந்தது.

சுடுகாட்டுக்குச் சென்று பலி கொடுக்கும் நிகழ்ச்சி கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறவில்லையாம். இந்த ஆண்டுதான் அதுமீண்டும் நடத்தப்பட்டதாக பக்தர்கள் கூறினர்.

மறுநாள் காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியைவணங்கினர். அதன் பின்னர் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக கர்ப்பிணி ஆட்டின் வயிற்றைக் கிழித்து வயிற்றுக்குள் இருந்தகுட்டியை வெளியே எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தேறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+