விரைவு நீதிமன்றங்களுக்கு நிதி: மதிமுக கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் ஆயுள்காலம் முடிவடையவுள்ள விரைவு நீதிமன்றங்களை தொடர்ந்து இயக்க, போதிய நிதியை மத்திய அரசுஉடனடியாக ஒதுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள விரைவு நீதிமன்றங்களின் ஆயுள்காலம் வருகிற 31ம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து இயங்குவதற்குபோதிய நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளதால் விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்குமா என்பதில் சந்தேகம்எழுந்துள்ளது.
இந்த நிலையில் மதிமுக வழக்கறிஞர்கள் அணியின் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில், தமிழகத்தில் விரைவுநீதிமன்றங்களைத் தொடங்க 11வது நிதிக் கமிஷன் 2000மாவது ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. 5 ஆண்டுகளுக்கு விரைவுநீதிமன்றங்களின் பதவிக்காலம் இருக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்திருந்தது.
ஆனால் தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்களும் 2003ம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டன. எனவே இன்னும் 2 ஆண்டுகளுக்குஅதன் ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும்.
தமிழகத்தில் விரைவு நீதிமன்றங்கள் மூலம் 1.25 லட்சம் வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. கீழ் நீதிமன்றங்களில் தற்போது3 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்கினால் இந்த நிலுவை எண்ணிக்கையைகுறைக்க முடியும்.
எனவே விரைவு நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்க போதிய நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications