கணவரின் இறப்பு சான்றிதழுக்காக போராடும் ஜீவஜோதி
கொடைக்கானல்:
![]() |
ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமார் சரவண பவன் ஹோட்டல் அதிபர் அண்ணாச்சி ராஜகோபால் அனுப்பி வைத்தகூலிப் படையால் கொல்லப்பட்டு கொடைக்கானல் மலைப் பகுதியில் உருட்டிவிடப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் ராஜகோபால் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். அண்ணாச்சி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
ஆனால், பிரின்ஸ் சாந்தகுமாரின் இறப்பு சான்றிதழை இதுவரை ஜீவஜோதிக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மாநில அரசு,அதாவது கொடைக்கானல் கிராம அதிகாரி.
இதைத் தொடர்ந்து இறப்பு சான்றிதழ் கோரி கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஜீவஜோதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, சாந்தகுமார் இறந்த இடமான டைகர் சோலை பகுதி நகராட்சியின் எல்லைக்குள் வரவில்லைஎன்பதால் இறப்பு சான்றிதழ் தர முடியாது என்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் கூறினார்.
இதை தொடர்ந்து நீதிபதி கமால் பாட்ஷா, கொடைக்கானல் தாசில்தாரிடம் இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்யுமாறுஜீவஜோதிக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்படி கொடைக்கானல் தாசில்தாரிடம் இறப்பு சான்றிதழ் கேட்டு ஜீவஜோதி மனு தாக்கல் செய்தார். ஆனால் 2001ம்ஆண்டுக்கான இறப்பு பதிவேடு சார்பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் சார்பதிவாளரிடம் மனு செய்யுமாறு தாசில்தார்கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனது கணவரின் இறப்பை பதிவு செய்ய சார்பதிவாளருக்கு உத்தரவிடக்கோரி கொடைக்கானல் நீதிமன்றத்தில்ஜீவஜோதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்ஷா இந்த வழக்கை ஏப்ரல் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்













Click it and Unblock the Notifications