பண்ணாரி அம்மன் கோவிலில் தீ மிதித்த விஜயக்குமார்
ஈரோடு:
புகழ் பெற்ற ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட தமிழக அதிரடிப்படை தலைவர் டிஜிபிவிஜயக்குமார், தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலில்நடைபெறும் தீ மிதி விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தீ மிதிப்பது வழக்கம்.
வழக்கமாக பெரும் கூட்டம் திரளும் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு கட்டுக் கடங்காத கூட்டம்காணப்பட்டது. சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு விட்டதால் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
நேற்று காலை தீ மிதி விழா தொடங்கியது. 6 அடி அகலம், 12 அடி நீளமுள்ள அக்னிக் குண்டத்தில் பக்தர்கள் நடந்து சென்றுநேர்த்திக் கடனை செலுத்தினர்.
வீரப்பனை வீழ்த்தியவுடன் இதே கோவிலுக்குவந்து மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்திய டிஜிபி விஜயக்குமார், நேற்று தீமிதித்து இன்னொரு நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினார். எந்தவித சிரமமும் இன்றி அவர் அக்னிக் குண்டத்தை கடந்தார்.
விஜயக்குமார் தவிர காவல்துறை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம், எம்.எல்.ஏக்கள் செல்வி முருகேசன், கந்தசாமி, சுந்தரம்,காங்கிரஸ் மாநில செயலாளர் விடியல் சேகர், முன்னாள் எம்.பி. கே.கே.காளியப்பன், முன்னாள் ஐ.ஜி. வி.சி.பெருமாள் உள்ளிட்டஏராளமான பிரபலங்களும் தீ மிதியில் கலந்து கொண்டனர்.
தீ மிதி திருவிழாவையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications