சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க ஜெ. சதி: டி.ஆர்.பாலு
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க முதல்வர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசுகையில், டி.ஆர்.பாலு மீது சரமாரியாக புகார்களைக் கூறினார்.
இதையடுத்து பாலுவின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், சேது சமுத்திரத் திட்டம் குறித்து பலமுறை தான் வற்புறுத்தியதாகவும், அதை நிறைவேற மத்திய அரசுக்கு மனமில்லைஎன்பது போலவும் ஜெயலலிதா பேசியுள்ளார்.
அப்படியென்றால் ஆளுனர் உரையில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லையே, அது ஏன்?
சேது சமுத்திரத் திட்டத்தின் நிலைத்தன்மை குறித்து கேள்வி கேட்டு பிரதமர் அலுவலகம் எனது அலுவலகத்திற்கு குறிப்புஅனுப்பியதாக ஜெயலலிதா கூறியுள்ளதில் சற்றும் உண்மையில்லை. இந்தத் திட்டம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு வந்தமனுவை அவர்கள் எனது அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பியிருந்தனர்.
அந்த மனுவுக்கும் மார்ச் 4ம் தேதியே பதில் அனுப்பி விட்டோம்.
சர்வதேச அளவில் மதிப்பு வாய்ந்த நீரி அமைப்பின் மூலம் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே சேது சமுத்திரத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந் நிலையில் அவசர கோலத்தில் இத்திட்டத்தை அமல்படுத்த மத்தியஅரசு முடிவு செய்ததாக ஜெயலலிதா கூறுவதை ஏற்க முடியாது.
இத் திட்டத்தை அவர் விரும்பவில்லை. அதற்காக என்னவெல்லாம் கூற முடியுமோ அதை கூறி வருகிறார். சேது சமுத்திரத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதா முயற்சிக்கிறார் என்று கூறியுள்ளார் பாலு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications