வாகன சோதனைக் கூடம்: சென்னையில் அமைக்க ஜெ கோரிக்கை
சென்னை:
கார்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனையிடும் சோதனைச் சாலையை (Automobile Testing Facility) சென்னையில்அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் ரூ. 1,800 கோடியில் இந்த சோதனைச் சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.நாட்டிலேயே முதல் வாகன சோதனைக் கூடமாக இது இருக்கும். இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் மத்திய அரசுபேச்சு நடத்தி வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் இதில் தலையிட்டு, இந்த சோதனைச் சாலையை சென்னையில் அமைக்க உதவ வேண்டும் என முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடித விவரம்:
ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னை நகரில் தான் போர்ட், ஹூயூன்டாய், மிட்சுபிஸி ஆகிய சர்வதேச கார்தயாரிப்பு நிறுவனங்களும், அசோக் லேலண்ட், டிவிஸ், டபே, ஆகிய உள்நாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களதுதொழிற்சாலைகளை அமைத்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
இங்கு தான் எம்.ஆர்.எப். உள்ளிட்ட டயர் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த நாராயண் கார்த்திகேயன் பார்முலா ஒன் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த பிறகு கார் போட்டிகள் குறித்துதமிழகத்தில் ஒரு பரவசமான ஆவல் நிலவுகிறது. இதனால் விரைவில் சென்னையில் புதிய கார் பந்தய மைதானத்தையும்உருவாக்கவுள்ளோம்.
இப்படி வாகன, டயர் தயாரிப்பிலும் கார் ரேசுக்கான கட்டமைப்பும் கொண்ட சென்னையில் வாகன சோதனைகளுக்கான கூடத்தைஅமைப்பது தான் நியாயமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுதயார்.
புதிய கார் ரேஸ் மைதானத்தையும் வாகன சோதனைக் கூடத்தையும் சேர்த்தே கூட ஒரே திட்டமாக நிறைவேற்றலாம்.
எனலே இத் திட்டத்தை சென்னைக்கே ஒதுக்கித் தர வேண்டும். இதில் பிரதமர் தலையிட்டு தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்றுகோரியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications