பல கோடீஸ்வரர்களை வீழ்த்திய மோசடி துணை நடிகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sri Lathaதன் உடல் வணப்பைக் காட்டி பல திருமணங்கள் செய்து, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய முன்னாள் துணைநடிகையை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இப் பெண் இதுவரை 4 பேரை திருமணம் செய்து அவர்களிடம்பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீலதா (வயது 36). வெளிநாடுகளில் இருந்து எலக்ட்ரிக் பொருட்களை இறக்குமதிசெய்து விற்கும் கடை நடத்தி வந்தார்.

இவர் மீது சென்னையை சேர்ந்த 2 வட்டிக் கடைக்காரர்கள் குற்றப் பிரிவு போலீசாரிடம் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில்ஸ்ரீலதா, தங்களிடம் ரூ.77 லட்சம் வரை வாங்கிவிட்டு மோசடி செய்து விட்டதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஸ்ரீலதாவை 28ம் தேதி கைது செய்தனர். ஸ்ரீலதாவிடம் போலீசார் விசாரணைநடத்தியபோது சென்னையில் பல கோடீஸ்வரர்களை ஏமாற்றி இவர் பல கோடி சுருட்டியது தெரிய வந்துள்ளது.

இதுவரை இவர் 4 பேரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகைகள், பணம், நிலங்கள் என பல கோடிகளை சுருட்டியுள்ளார்.ஸ்ரீலதா கைதானதை அறிந்து கிறிஸ்டோபர் என்ற தொழிலதிபர், சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜை சந்தித்து ஒரு புகார்மனுவை கொடுத்துள்ளார்.

இவர் ஸ்ரீலதாவை மணந்து அவரால் ஏமாற்றப்பட்டவராவார். கிறிஸ்டோபர் தந்துள்ள புகாரில்,

சென்னையில் நான் மீன் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறேன். ஸ்ரீலதாவும் எலெக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமி, ஏற்றுமதிதொழில் செய்து வந்தார். தொழில் ரீதியாக நண்பர்களான நாங்கள், பிறகு காதலர்களானோம்.

இதைத் தொடர்ந்து கடந்த 95ம் ஆண்டு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கத்தில் வசித்துவந்தோம்.காலப்போக்கில் அவர் என் மீது உண்மையான அன்பு வைத்திருக்கவில்லை எனத் தெரியவந்தது.

எனது சொத்துக்களை அபகரிக்கும் திட்டத்துடன் தான் அவர் என்னை திருமணம் செய்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவளது குடும்பப் பின்னணியை அறிந்து கொண்டபோது எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

ஸ்ரீலதா முன்பு ஆணிவேர், வண்டிச்சக்கரம், ராணித் தேனீ ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறாள் என்றும் அவர்நடிகையாக இருந்த போது நேதாஜி என்பவரை மணந்து பிறகு அவரை உதறி விட்டாள் என்றும் தெரியவந்தது.

என்னுடன் வாழும்போதே தரம்சந்த் நாகர் என்ற வயதான தொழிலதிபரையும் ஏமாற்றி 3வதாக திருமணம் செய்துகொண்டார்.அவரை தனது பெரியப்பா என்று என்னிடம் அறிமுகம் செய்தாள்.

நான் ஸ்ரீலதா பெயரில் கொட்டிவாக்கத்தில் இரண்டரை கிரவுண்டு நிலம் வாங்கிக் கொடுத்தேன். அந்த நிலம், 30 சவரன் நகைஉட்பட மொத்தம் ரூ.33 லட்சத்தை என்னிடமிருந்து மோசடி செய்துவிட்டாள்.

தரம்சந்த் நாகர், நேதாஜி ஆகியோரை திருமணம் செய்தது குறித்து கேட்டபோது, என்னை அவள் கொலை செய்ய முயற்சித்தாள்.அவளது மோசடி வெளுத்து விட்டதால் என்னை உதறிவிட்டு சென்று விட்டாள்.

தரம்சந்த் நாகர் இறந்து விட்டதால் அவரது மகன்களை மிரட்டி ரூ. 1.5 கோடி பணத்தை சுருட்டி விட்டாள். இப்போது சினிமா படஅதிபர் ஒருவரை 4வதாக திருமணம் செய்து கொண்டுடிருக்கிறாள் ஸ்ரீலதா.

சொந்தப் படம் தயாரிப்பதாக கூறி அவரிடமும் நிறைய பணத்தை சுருட்டியுள்ளார் என்று கூறியுள்ளார் கிறிஸ்டோபர்.

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையிலும் கிறிஸ்டோபர் சொன்ன புகார்களில் உண்மையிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஸ்ரீலதாவை போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலதாவால் ஏமாற்றப்பட்டவர்களையும் அழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+