Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணீர்விட்ட ரகு, கால் வலிக்கிறது-ஜெயேந்திரர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கையை வாங்க வந்த ரகு, தனது அண்ணன் விஜயேந்திரர் மற்றும் ஜெயேந்திரரைப்பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சுந்தரேச அய்யர் தான் தேற்றினார்.

சங்கரராமன் கொலை வழக்கில் நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் இன்று தான் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையின்நகல்கள் ஜெயேந்திரர் உள்ளிட்ட 24 பேருக்கும் வழங்கப்பட்டன.

இதை வாங்க ஜெயேந்திரர் கலவையில் இருந்தும், விஜயேந்திரர் சென்னையிலிருந்தும் வந்தனர். அப்பு கடலூர் சிறையிலிருந்தும்,சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்டோர் சென்னை மத்திய சிறையில் இருந்தும் போலீஸ் வேன்களில் மிக பலத்த பாதுகாப்போடுகாஞ்சிபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

ரகு முன்பே நீதிமன்றத்துக்குள் அழைத்து வரப்பட்டுவிட்டார். அவர் அருகே சுந்தரேச அய்யர் நின்றிருந்தார். குற்றம் சாட்டப்பட்டமற்றவர்களும் வரிசையாக நின்றிருந்தனர்.

அப்போது விஜயேந்திரர் நீதிமன்றத்துக்குள் வந்தார். அவரைப் பார்த்தவுடன் ரகு குலுங்கிக் குலுங்கி அழுதார். அடுத்ததாகஜெயேந்திரரும் உள்ளே வர ரகுவின் அழுகை அதிகமானது. இருவரையும் பார்த்தவாரே ரகு ஓலமிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் ரகுவையே பார்க்க ஆரம்பித்தனர். அப்போது சுந்தரேச அய்யர் தான் ரகுவைத் தேற்றினார்.அவரது தோளில் ஆதரவாகக் கைபோட்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.

சிறிது நேரத்தில் சகஜ நிலைக்கு வந்த ரகு, கலங்கிய விழிகளுடனேயே நின்றிருந்தார். பின்னர் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெறஅவரது பெயர் அழைக்கப்பட்டபோது நீதிபதியிடம் சென்று கண்ணீர் நிறைந்த விழிகளுடன் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெற்றுக்கொண்டார்.

ரகுவும் சுந்தரேச அய்யரும் சங்கரராமன் கொலை வழக்கில் கைதானதோடு குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

கால் வலிக்கிறது..ஜெயேந்திரர்:

இதற்கிடையே ஒவ்வொருவராக வரிசையாக அழைக்கப்பட்டு குற்றப் பத்திரிக்கையின் நகல்களைத் தந்தார் நீதிபதி. இதனால்அரை மணி நேரத்துக்கும் மேலாக ஜெயேந்திரர் நிற்க நேரிட்டது. ஒரு கட்டத்தில் ஜெயேந்திரர் தளர்வடைந்துவிட்டார்.

நிற்க முடியாத அவர், தனக்கு கால் வலிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு நாற்காலி வழங்க நீதிபதி உத்தரவிட,நாற்காலி தரப்பட்டது.

குற்றவாளிகளான ஆனந்தகுமார், கே.எஸ்.குமார் ஆகியோர் தங்களது வழக்கறிஞர்கள் வராததால் குற்றப் பத்திரிக்கையைஇப்போது வாங்க முடியாது என்றனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, நீங்கள் வாங்காவிட்டால் அது போலீசாரிடம்ஒப்படைக்கப்படும் என்றார்.

காமாட்சி அம்மனும்.. வேளாங்கண்ணியும்..

இன்னொரு குற்றவாளியான சில்வஸ்டர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் புது குண்டு போட்டான்.

அவன் கூறுகையில், இந்த குற்றப் பத்திரிக்கையை போலீசார் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து கும்பிட்டு எடுத்துவந்துள்ளனர். இதனால் அதை வாங்க பயமாக உள்ளது. வேளாங்கண்ணி கோவிலில் வைத்து பிரார்த்தனை நடத்தியிருந்தால்இதை தைரியமாக வாங்குவேன் என்றான்.

இதையடுத்து அவனது குற்றப் பத்திரிக்கையை அவனது வழக்கறிஞரிடம் தர உத்தரவிட்டார் நீதிபதி.

ஜெயேந்திரரிடம் குற்றப் பத்திரிக்கை தரப்பட்டு அதற்கான கையெழுத்து கேட்கப்பட்டபோது, வழக்கம்போல் கைநாட்டேவைத்தார்.

அப்புவும் தெலுங்கும்..

இந் நிலையில் அப்புவின் வழக்கறிஞர் எழுந்து, அப்புக்கு தமிழ்ல் பேசத் தான் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாது. இதனால்அவருக்கு அவரது தாய் மொழியான தெலுங்கில் குற்றப் பத்திரிக்கை தர வேண்டும் என்றார்.

இதை அரசு வழக்கறிஞர் எதிர்த்தார். அப்பு ஏற்கனவே வேறு வழக்கில் சிறையில் இருந்தபோது தமிழில் தான் குற்றப் பத்திரிக்கைதரப்பட்டுள்ளது. இப்போது மட்டும் தெலுங்கில் கேட்பது திசை திருப்பும் முயற்சி என்றார்.

இருப்பினும் இக் கோரிக்கை குறித்து ஆய்வு செய்தவதாக நீதிபதி உத்தமராஜன் கூறினார்.

பின்னர், வரும் ஏப்ரல் 5ம் தேதி அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் அப்ரூவர் ரவிசுப்பிரமணியத்திடம் அனைவர் முன்னிலையிலும் வாக்குமூலம் பெறப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+