சொத்துத் தகராறு: தந்தை, 2 மகள்கள், மகன் தற்கொலை
சென்னை:
சென்னை அரும்பாக்கத்தில், சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி அழகம்மாள். இவர்களது மகள்கள் தனலட்சுமி, ராஜலட்சுமி, அன்னலட்சுமி.மகன் தங்கவேலு.
தனலட்சுமி சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார். அரும்பாக்கத்தில் வீடு ஒன்றைவாங்கி அங்கே அவரது குடும்பம் வசித்தது. இந்த வீட்டை தந்தையின் நிதியுதவியுடன் தனலட்சுமி வாங்கியதாகத் தெரிகிறது.
இந் நிலையில் தனலட்சுமியின் தங்கை அன்னலட்சுமிக்கும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் வேலை கிடைத்தது.இதனால் அவரும் குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தனலட்சுமிக்கும், அன்னலட்சுமிக்கும் இடையே அந்த வீடு யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சினைஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம்.
இதில் தாய், தந்தையர், சகோதரர் தங்கவேலு ஆகியோர் தலையிட்டு அவ்வப்போது சமாதானம் செய்து வைத்து வந்துள்ளனர்.
சமீபத்தில் இந்த மோதல் மிகவும் வலுத்தது. இதனால் மனமுடைந்து போன பெற்றோரும் தங்கவேலு, தனலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரும் சில நாட்களுக்கு முன் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தாங்கள் தற்கொலை செய்யப் போவதாக அன்னலட்சுமியிடம் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
திருப்பதி சென்ற அவர்கள் விஷம் குடித்துள்ளனர். இதில் ராஜு, தனலட்சுமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தங்கவேலு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். தாய் அழகம்மாளும் இன்னொரு மகளானராஜலட்சுமியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், அன்னலட்சுமியின் உடலும் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரும், தனதுகுடும்பத்தினர் திருப்பதி சென்றவுடன் விஷம் குடித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
சொத்துத் தகராறில் தாய், ஒரு மகள் தவிர அக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், இரு மகள்களும் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications