ஜெயேந்திரர் உடல் நலம்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை
கலவை:
ஜெயேந்திரர் உடல் நலம் குறித்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலவை சங்கரமடநிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள ஜெயேந்திரர் தற்போது கலவை பிருந்தாவனத்தில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் ஜெயேந்திரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் அவரது உடல் நலம்குறித்து கவலையடைந்த அவரது பக்தர்கள் கலவை சங்கரமடத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
ஆனால் ஜெயேந்திரருக்கு உடல் நலக்குறைவு எதுவும் ஏற்படவில்லை என்று சங்கரமடம் அறிவித்துள்ளது. இது குறித்து கலவைசங்கரமட நிர்வாகிகள் கூறும்போது, ஜெயேந்திரர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.
சில விஷமிகள் ஜெயேந்திரர் உடல் நலம் குன்றியிருப்பதாக தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.இதை யாரும்நம்பவேண்டாம்.
இது போல தவறான வதந்திகள் பரப்புவோர்கள் மீது மடத்தின் சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களைதெய்வம் மன்னிக்காது என்று கூறினர்.












Click it and Unblock the Notifications