புதுவையில் ரங்கசாமிக்கு ஆதரவாக தொகுதிகள் மறு சீரமைப்பு!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டசபைத் தொகுதி மறு வரையறை முடிந்து வரைவு தொகுதிப் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமிக்கு சாதகமாக பல தொகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்குப்படி தொகுதிகளை மறு வரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.புதுவையிலும் இந்தப் பணிகள் நடந்து வந்தன. தற்போது இது முடிவடைந்துள்ளது.
மறு வரையறைக்குப் பின்னர் உள்ள தொகுதிகளின் நிலவரம் குறித்த பட்டியலை மறு வரையறைக் கமிட்டி வெளியிட்டுள்ளது.
அதன்படி மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் எந்தவித மாற்றம் இல்லை. பாண்டிச்சேரியில் இதுவரை 21 தொகுதிகள் இருந்துவந்தன. அவை தற்போது 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், காரைக்கால் பிராந்தியத்தில் 4 ஆக இருந்து வந்த தொகுதிகள் 3 ஆக குறைந்துள்ளன. மாஹே பகுதியில் 2தொகுதிகள் இருந்து வந்தன. அது தற்போது ஒன்றாக குறைந்துள்ளது. ஏனாம் தொகுதியில் எந்த மாற்றமும் இல்லை.
தொகுதி மறு சீரமைப்பில் முதல்வர் ரங்கசாமிக்கு சாதகமாக பல பகுதிகள் மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்திலேயேமுணு முணுக்கப்படுகிறது. அவருக்கு சாதகமாக உள்ள பகுதிகளைச் சேர்த்து புதிதாக இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய இரு புதியதொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸாரே கூறுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் தற்போது உறுப்பினராக உள்ள நெட்டப்பாக்கம் தொகுதி, தனி தொகுதியாகமாற்றப்பட்டுள்ளது. இதனால் வைத்தியலிங்கம் கோஷ்டியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் மூலம்வைத்தியலிங்கத்திற்கு ரங்கசாமி "ஆப்பு" வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல, புதுவை கண்ணனின் தீவிர ஆதரவாளரும், சமீபத்தில் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தவருமான லட்சுமிநாராயணின் தொகுதியான காசுக்கடை தொகுதி ஒழிக்கப்பட்டு அது ராஜ்பவன் தொகுதியோடு சேர்க்கப்பட்டு விட்டது.
இதேபோல, காரைக்காலிலும் ரங்கசாமிக்கு எதிர்ப்பாக உள்ள நள மஹாராசன் போட்டியிடும் குருவிநத்தம் தொகுதியை பாஹூர்தொகுதியுடன் சேர்க்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தனது அரசியல் எதிகளுக்கு பெரிய அளவில் ரங்கசாமி "ஆப்பு" வைத்துள்ளதாக புதுவை வட்டாரத்தில் பரபரப்பாகபேசப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications