8 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக் காலம் நீட்டிப்பு
சென்னை:
உயர்நீதிமன்ற 8 கூடுதல் நீதிபதிகளின் பதவிக் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் 42 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் இப்போது 25நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.
இந்த 25 பேரில் எஸ். அஷோக் குமார், ஆர். பானுமதி, டி.வி. மாசிலாமணி, எஸ்.கே. கிருஷ்ணன், சர்தார் சக்கரியா உசேன், ஏ.ஆர்.ராமலிங்கம், எஸ்.ஆர். சிங்காரவேலு, எம். தணிகாசலம் ஆகிய 8 பேர் கூடுதல் நீதிபதிகளாவர்.
இவர்களது பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.
கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பது வழக்கம். ஆனால் தற்போது 8 நீதிபதிகளையும் 4 மாதத்திற்கு கூடுதல்நீதிபதிகளாக பணிபுரியும் படி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதித்துறை மரபுப்படி இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பதவி ஏற்க வேண்டும். எனவே இவர்களது பதவி ஏற்புவிழா நாளை காலையில் நடைபெறுகிறது. இவர்களுக்கு தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications