விஷம் வைத்து 100 குரங்குகள் கொலை!
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் சாப்பிட்டு இறந்து கிடந்தன. விஷமிகளின் செயலாக இதுசந்தேகிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மச்சுவாடிப் பகுதியில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இங்குள்ள அரசு கால்நடைப் பண்ணைப் பகுதியிலும்ஏராளமான குரங்குகள் உள்ளன.
இந்த நிலையில், கால்நடைப் பண்ணை அருகே சாலையோரத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வாயில் நுரை தள்ளியபடிஇறந்து கிடந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
யாரோ விஷமிகள் சிலர் குரங்குகளுக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications