காளிமுத்து பதவி விலக மார்க்சிஸ்ட் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராபின்மெயின் வழக்கில் சிக்கியுள்ள சபாநாயகர் காளிமுத்து உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றுசட்டசபை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ஹேமச்சந்திரன் பேசுகையில், ராபின் மெயின் மோசடி வழக்கில் சபாநாயகர் காளிமுத்துநீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ள காளிமுத்து சபாநாயகர் பதவியில் நீடிப்பது அப்பதவியின் பாரம்பரியத்திற்குகளங்கம் விளைவிப்பதாகும்.
எனவே ராபின் மெயின் மோசடி வழக்கு விசாரைணக்கு வருவதற்கு முன்பு தனது பதவியை காளிமுத்து ராஜினாமா செய்யவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications