கருணாநிதிதியுடன் யஷ்வந்த் சின்ஹா திடீர் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா சந்தித்தார்.
சென்னை வந்த யஷ்வந்த் சின்ஹா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை அவரதுகோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக பொதுச் செயலாளர் குமாரவேலுவும் உடனிருந்தார். சுமார் அரை மணி நேரம்கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார் சின்ஹா.
இந்த சந்திப்பு குறித்து குமாரவேலு கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். வேறு ஒன்றும் இல்லை என்றார்.
பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் கூட்டணியில் திமுக சேர்ந்த பிறகு, பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்ஒருவர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications