புதிய போப்பாக 6 பேருக்கு வாய்ப்பு
வாடிகன்:
புதிய போப்பாக இந்தியாவின் இவான் டயஸ் உட்பட 6 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
போப் ஆண்டவர் மரணம் அடைந்ததும், 15 நாட்களில் இருந்து 20 நாட்களுக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இதற்கான தேர்தல் வாடிகன் தேவாலயத்தில் நடைபெறும்.
உலகம் முழுவதும் உள்ள 120 கர்தினால்கள் ஓட்டுப் போட்டு புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வார்கள். பூட்டிய அறைக்குள்ரகசியமாக இந்த கூட்டம் நடைபெறும்.
ஒவ்வொரு கர்தினால்களுக்கும் ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அந்தச் சீட்டில் லத்தீன் மொழியில் போப் ஆண்டவராக யாரைதேர்ந்தெடுக்கிறேன் என்று அவர்கள் குறிப்பிட வேண்டும். வேட்பாளர்கள் என்று இதில் யாரும் போட்டியிட மாட்டார்கள்.
இந்த தேர்தலில் 3 முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகமனதாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவரையே புதிய போப்ஆண்டவராக அறிவிக்கலாம். போட்டி இருந்தால் 3ல் 2 பங்கு ஓட்டு பெறும் கர்தினால் புதிய போப்பாக அறிவிக்கப்படுவார்.
போட்டி இருந்து 3ல் 2 பங்கு கிடைக்காத பட்சத்தில் அதிக ஓட்டுகளின் அடிப்படையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவார்.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தான் அந்த அறையின் கதவு திறக்கப்படும்.
புதியவர் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அந்த அறையிலுள்ள குழாய் வழியே வெண்புகை வெளியே வரும். இதை வைத்து புதியபோப் தேர்ந்தெடுக்கப்பட்டதை தெரிந்து கொள்ளலாம்.
1268ம் ஆண்டு போப் ஆண்டவர் 4வது கிளமென்ட் இறந்து 3 ஆண்டுகள் கழிந்த பிறகும் புதிய போப்பை தேர்ந்தெடுக்கமுடியாமல் சிக்கல் ஏற்பட்டது. இதற்குப் பிறகு தான் பூட்டிய அறைக்குள் ரகசியமாக தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தது.
இம்முறை புதிய போப் ஆண்டவராக இத்தாலிய கர்தினால் ஏஞ்சலோ சொடானா, ஜெர்மன் கர்தினால் ஜோசப் ரட்சிங்கர் மற்றும்மும்பை ஆர்ச் பிஷப் இவான் டயஸ் உள்பட 6 பேருக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications