15 ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாட்டம்
சென்னை:
தமிழகத்தில் இன்று 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் கண்காணிப்பு இணை இயக்குனர் அனூப் ஜெய்ஸ்வால், சென்னை நிர்வாக ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரி பி.பாஸ்கர், சென்னை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி சிஐடி டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த சிதம்பரசாமி, காகித ஆலை தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி எஸ்.பி.தாமரைக்கண்ணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், திருச்சி எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் எஸ்.பி.ஜே.ராஜேந்திரன், ராமநாதபுரம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த அஷோக் குமார் தாஸ், தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) எஸ்.பி.கே.சங்கர், கரூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் இருந்த அபின் தினேஷ் மோடக், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (2) எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை எஸ்.பி. ஏ.பாரி, அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலக பாதுகாப்பு துணை ஆணையர் எம்.டி.கணேசமூர்த்தி, திருவண்ணாமலை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக துணை ஆணையர் அபி பிரகாஷ், சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். பரங்கி மலை துணை ஆணையர் சந்தீப் மிட்டல் மதுரை மாநகர தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உள்துறை செயலாளர் பவன் ரெய்னா அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications