ஜெயலட்சுமி: சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
மதுரை:
போலீஸ் அதிகாரிகளால் ஜெயலட்சுமி பாலியல்ரீதியல் கொடுமைப்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ இன்று தனது இறுதிஅறிக்கையை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
22 போலீஸ் அதிகாரிகள் பேர் மீது பரபரப்பான செக்ஸ் புகார்களை கூறியவர் ஜெயலட்சுமி. இந்தப் புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைநடத்தியது.
ஜெயலட்சுமியின் புகார் பட்டியலில் உள்ள அனைவரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த டிசம்பரில் இடைக்காலஅறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
ஜெயலட்சுமியால் புகாருக்குள்ளானவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.ஜெயலட்சுமியை திருமணம் செய்வதாக கூறி மோசடிசெய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூடுதல் எஸ்.பி. ராஜசேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தொடர்பான முக்கியஆதாரங்களை சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி, இன்று இறுதி அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
இந்த இறுதி அறிக்கையில் ஜெயலட்சுமியின் செக்ஸ் விவகாரங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் கொடுத்தஆதாரங்கள், ஜெயலட்சுமி கொடுத்த ஆதாரங்கள் மற்றும் ஜெயலட்சுமிக்கு எதிரான மோசடி புகார்கள் தொடர்பான அனைத்துவிவரங்களும் இடம் பெற்றுள்ளன.
இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் குற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கலக்கத்தில்உள்ளனர். செக்ஸ் ரீதியாக ஜெயலட்சுமியை கொடுமைப்படுத்திய 5 பேர் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பரபரப்பாகபேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications