சென்னை: கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கடல் எல்லையில் பழுதான படகில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்களை இந்தியக் கடலோர காவல் படையினர்மீட்டனர்.
இந்தப் படகு இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டது. இது குறித்து அறிந்த இலங்கை அரசு, இந்தியக் கடலோர காவல் படையுடன்தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்டுத் தருமாறு கோரியது.
இதை தொடர்ந்து கடலோர காவல் படையினர் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில் அந்தப்படகு கண்டுபிடிக்கப்பட்டது. படகில் இருந்த 5 மீனவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பிறகு அந்தப் படகு கப்பல் மூலம் சென்னைக்கு இழுத்து வரப்பட்டது. படகை சரி செய்த பின்னர் அவர்கள் அனைவரும் மீண்டும்இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த தகவலை இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications