100 குரங்குகளை விஷம் வைத்துக் கொன்ற வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் விஷம் வைத்து 100 குரங்குகளைக் கொன்றதாக ஒரு வாலிபரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வாயில் நுரை தள்ளியபடி குரங்குகள் இறந்து கிடந்ததால் அவற்றிற்கு யாரோ விஷமிகள் விஷம் வைத்திருக்கவேண்டும் என்று கருதப்பட்டது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இவர்களது விசாரணையில், குரங்குகளுக்கு விஷம் வைத்த கோபால் (வயது 23) என்பவர் பிடிபட்டார். இவரிடம்விசாரணை நடத்தியபோது,
முத்துலட்சுமி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து குரங்குகள் அடிக்கடி நாசம் விளைவித்து வந்தன. இதனால்குரங்குகளை விஷம் வைத்துக் கொல்லுமாறு அவர் என்னைக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மணிவேல் என்பவரின் உதவியுடன் விஷம் வைத்தேன் என்று கூறியுள்ளார் கோபால்.தலைமறைவாகி விட்ட மணிவேலை போலீஸார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications