சேது சமுத்திர திட்டம்: இழுத்தடிக்கும் தமிழக அரசு- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
ஒட்டன்சத்திரம்:
தமிழக அரசு சேது சமுத்திர திட்டத்திற்கு தடையில்லா சான்றிதழ் தந்தால், மறுநாளே அத்திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல்நாட்டுவார் என்று ப.சிதம்பரம் கூறினார்.
இந் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
1971ல் மத்தியில் அடுத்த யார் ஆட்சியமைப்பது என்பதை தமிழக மக்கள் தான் தீர்மானித்தார்கள். 2004ம் ஆண்டிலும் அதைநிரூபித்தார்கள். தமிழ்நாட்டு நிறைய செய்ய ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இல்லை.
சேது சமுத்திர திட்டத்திற்கு தடையாக இருப்பது யார்?. இத் திட்டத்துக்கு தடையில்லா சான்று வழங்காமல் தமிழக அரசுகாலதாமதம் செய்து வருகிறது.
தடையில்லா சான்று வழங்கி திட்டத்திற்கு ஒத்துழைக்க தயார் என்று தமிழக அரசு அறிவித்தால், மறுநாளே இந்த திட்டத்திற்குபிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
அதே போல சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு இன்னும் டெண்டர் கோரிய தமிழக அரசு, யாரைத் தேர்வுசெய்தது என்பதை அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் தொழிற்சாலைகளைத் தொடங்க மாநில அரசு முயவில்லை. மத்திய அரசோடு சண்டை போடுவதிலேயே காலம்கழிக்கிறார் ஜெயலலிதா.
தமிழகம் முன்னேற வேண்டுமானால் ஜெயலலிதாவின் ஆட்சி போக வேண்டும்.
கடந்த 2003-04ம் ஆண்டு மத்தியில் பொறுப்பில் இருந்த பாஜக அரசு, தமிழக அரசுக்கு திட்ட உதவியாக ரூ.1,623 கோடிவழங்கியது. ஆனால் தற்போது காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் பதவியேற்ற உடன் ரூ.1,735 கோடி வழங்கியுள்ளது.
நடப்பு ஆண்டில் மேலும் ரூ.2,541 கோடி தமிழகத்துக்கு வழங்கப்படும் என்றார் சிதம்பரம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications