என் வழி தனி வழி..: விஜய்காந்த்
சென்னை:
தான் புதுக் கட்சி தொடங்கியதும் மற்ற கட்சிகளில் உள்ள தனது ரசிகர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி விடுவார்கள் எனவிஜய்காந்த் கூறியுள்ளார்.
கேள்வி: புதுக் கட்சி தொடங்கினால் திராவிடக் கலாச்சாரம், தேசியக் கலாச்சாரம் ஆகியவற்றில் எதைப் பின்பற்றுவீர்கள்?
விஜய்காந்த்: எங்கள் வழி தனி வழி (இப்படித்தான் ரஜினியும் சொன்னாரு). மக்கள் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோம்.
கேள்வி: இளம் கதாநாயகர்கள் ரொம்பப் பேர் வந்துவிட்டதால் ஓய்வு நிலைக்குச் சென்றதால் அரசியலுக்கு வருகிறீர்களா?
வி.காந்த்: யார் சொன்னது? நான் இன்னும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அரசியல் என் சிறு வயது ஆர்வம்.
கேள்வி: அப்படியானால் முன்பே அரசியலுக்கு வந்திருக்கலாமே?
வி.காந்த்: தனிப்பட்ட பலத்துக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்.
கேள்வி: அரசியலில் உங்களுக்கு வழிகாட்டிகள் யார்?
வி.காந்த்: காமராஜரும் எம்ஜிஆரும்
கேள்வி: கட்சி தொடங்கினால் நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?
வி.காந்த்: நடிகர் சங்க பொறுப்பில் இப்போது உள்ள பலரும் அரசியலில் இருக்கிறார்கள்.
கேள்வி: அரசியலில் உங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது என்கிறாரே வைகோ?
வி.காந்த்: பழுத்த மரம் மீது தானே கல் விழும் (அட.. பழுத்த அரசியல்வாதி மாதிரியே பேசுறாரே)
கேள்வி: சிவாஜியே கட்சி தொடங்கியது நான் செய்த பெரிய தவறு என்று கூறியிருக்கிறாரே?
வி.காந்த்: எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி தைரியம் வந்தது. அதே தைரியம் எனக்கும் உண்டு.
கேள்வி: உங்கள் ரசிகர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்களே? நீங்கள் கட்சி தொடங்கினால் அவர்கள் நிலை என்ன?
வி.காந்த்: நான் கட்சி தொடங்கியதும் மற்ற கட்சிகளில் உள்ள என் ரசிகர்கள் அந்தந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்வார்கள்.
கேள்வி: யாருடன் கூட்டணி?
வி.காந்த்: இப்போதுள்ள சூழலில் எந்தக் கூட்டணியிலும் சேர மாட்டோம். தனி கூட்டணி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications