சென்னையில் நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம்: ஜெ
சென்னை:
சென்னை அருகே உலகப் புகழ் பெற்ற நோக்கியா செல்போன் நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலை அமையவுள்ளதாகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.
முதல்கட்டாக நோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனம் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பு நிறுவனம்மற்றும் துணை பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கவுள்ளது.
நோக்கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் இது முதல் தயாரிப்பு நிறுவனமாகும். உலக அளவில் 10வது தயாரிப்பு நிறுவனமாகும்.செல்போன் தயாரிப்புக்கு ரூ. 675 கோடியும், துணை பாகங்கள் தயாரிப்புக்கு ரூ. 675 கோடியும், ஆக மொத்தம் ரூ. 1350 கோடிமொத்த முதலீட்டில் தயாரிப்பு தொழிற்கூடத்தை நோக்கியா நிறுவனம் தொடங்குகிறது.
இந்த தொழிற்சாலை மூலம் நேரடியாக 1200 பேருக்கும், மறைமுகமாக 6000 பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்ஜெயலலிதா.
முன்னதாக, தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா முன்னிலையில் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில்நோக்கியா நிறுவன உயர் அதிகாரிகளும், தமிழக அரசின் தொழில்துறை செயலாளரும் கையெழுத்திட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications