புதுக்கோட்டையில் அனைத்து மகளிர் மசூதி!
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் பெண்களுக்கான தனி மசூதி விரைவில் கட்டப்படவுள்ளது.
தமிழகத்தின் முதல் பெண்கள் ஜமாத் ஆகும் இது. இதன் முயற்சியால் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்றஇடத்தில் பெண்களுக்கான தனி மசூதி கட்டப்படவுள்ளது.
இதுகுறித்து ஷரீபா கான் கூறுகையில், முஸ்லிம் ஜமாத்துகளில் ஆண்களின் ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஷரீ அத் சட்டம்பெண்களுக்கு ஆதரவாக இல்லை. அதிலுள்ள குறைகளைக் களையும் பொருட்டும், ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து பெண்கள்விடுபடும் பொருட்டும்தான் இந்த ஜமாத்தை ஆரம்பித்தோம்.
எங்களது ஜமாத்தின் சார்பில் பரம்பூரில் பெண்களுக்கான மசூதியை கட்டவுள்ளோம். அதற்கான இடத்தைத் தேர்வு செய்துவிட்டோம். விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
முதலில் இந்த இடத்தை எங்களுக்குக் கொடுத்த உள்ளூர் ஜமாத், பின்னர் அதை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இருப்பினும்இப்பிரச்சினையை சமாளித்து வேறு ஒரு இடத்தை தற்போது தேர்வு செய்து விட்டோம். இது எங்களது பெண்கள் ஜமாத்துக்குக்கிடைத்த முதல் வெற்றியாகும் என்றார் ஷரீபா கான்.
முன்னதாக நடந்த முஸ்லிம் பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகள்வைக்கப்பட்டன. முஸ்லிம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும், முஸ்லிம் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்றபட்டியலிலிருந்து விலக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,
தொலைபேசி, இ மெயில், தபால் மூலம் தலாக் (விவாகரத்து) சொல்லுவதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும், ஜமாத்துகள்மூலம் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாககொண்டு வரப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications