நோக்கியா வந்தது யாரால?: உரிமை கொண்டாடும் ஜெ- தயாநிதி மாறன்
சென்னை:
நோக்கியா செல்போன் தயாரிப்பு தொழிற்சாலையை தமிழகத்துக்கு கொண்டு வர யார் காரணம் என்பது தொடர்பாக, தமிழகசட்டசபையில் திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே கடும் மோதல் நடந்தது.
தன்னுடைய முயற்சியால் தான் இந்த தொழிற்சலை தமிழகத்தில் அமைய உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால்,மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரான தயாநிதி மாறனால் தான் இத் தொழிற்சாலைதமிழகத்துக்கு வந்ததாக திமுக கூறுகிறது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பரணிகுமார் பேசும்போது, நோக்கியா செல்போன் தொழிற்சாலை அமையமத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தான் காரணம் என்றார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சுமார் 15 நிமிடங்கள் அவையில் கடும் கூச்சல் குழப்பம்ஏற்பட்டது.
அப்போது பேசிய நிதியமைச்சர் பொன்னையனும் அமைச்சர் நயினார் நாகேந்திரனும், நோக்கியா தொழிற்சாலை தமிழகத்துக்குவருவதற்கு புரட்சித் தலைவி, இதய தெய்வம், அம்மா தான் காரணம் என்றார்.
இல்லை மத்திய அமைச்சர் தயாநிதி தான் காரணம் என திமுகவினர் மீண்டும் சொல்ல, இரு தரப்புக்கும் இடையே கடும்வாக்குவாதம் மூண்டது.
அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா,
இந்தியாவில் தொழிற்சாலை தொடங்க நோக்கியா திட்டமிட்டது தெரிந்தவுடன் பல மாநிலங்களும் முட்டி மோதின. கடந்தடிசம்பரில் இந்த விவரம் எனக்குத் தெரிந்தவுடன் நானும் நடவடிக்கையில் இறங்கினேன். பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம்எழுதி இத் திட்டத்தை தமிழகத்துக்குக் கொண்டு வர உதவக் கோரினேன். மாநில அரசு எல்லா சலுகைகளையும் தரத் தயார் எனநோக்கியாவிடமும் தெரிவித்தேன்.
இந் நிலையில் கடந்த வாரம் நோக்கியா நிறுவனத்தினர் என்னைச் சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் இந்த தொழிற்சாலையைஅமைக்கச் சொன்ன நான் பல சலுகைகளையும் தந்தேன். இதை ஏற்ற அவர்கள் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க முடிவுசெய்தனர். இதனால் இது முழுக்க முழுக்க எங்களது சாதனை தான்.
மகராஷ்டிரா, ஹரியானா உட்பட பல மாநிலங்களில் ஆய்வு நடத்திவிட்டு இறுதியில் நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டை தேர்வுசெய்துள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தான் இந்த தொழிற்சாலை அமைவதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புவசதிகள் உள்ளன.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு அமைதி தவழுகிறது. இதனால் பிற மாநிலங்களை விட்டுவிட்டு தமிழகத்தைத்தேர்வு செய்தார்கள்.
இப்போது இத் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து சில விஷயங்களை நோக்கியா நிறுவனம் எதிர்பார்க்கிறது. அதைமத்திய அரசு செய்து தர வேண்டும் என்றார்.
அப்போது எழுந்த திமுக உறுப்பினர் ஆற்காடு வீராசாமி, இந்த மாபெரும் தொழிற்சாலை தமிழகத்துக்கு வந்ததற்காக திமுகவும்அதிமுகவும் சந்தோஷப்பட வேண்டும். இத் திட்டத்தை தமிழகத்துக்குக் கொண்டு வர கடந்த 5 மாதங்களாக தயாநிதி மாறன்பாடுபட்டார். தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் என்ற வகையில் அவர் நோக்கியாவுடன் பேசி இத் திட்டத்தை கொண்டுவந்தார்.
இத் திட்டம் நிறைவேற மத்திய அரசிடம் இருந்து என்ற உதவி வேண்டுமானாலும் அதை மத்திய திமுக அமைச்சர்கள் பெற்றுத்தருவார்கள் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது. இதன் மீது வரும் திங்கள்கிழமையும் விவாதம் நடக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications