குட்டை உடைத்த ஜெ: நெளிந்த திமுக எம்எல்ஏக்கள்
சென்னை:
எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை உயர்த்தியது தொடர்பாக திமுக உறுப்பினர் கேட்ட கோரிக்கைகளை முதல்வர் ஜெயலலிதாசட்டசபையில் பட்டியலிட்டதால் திமுக உறுப்பினர்கள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தனர்.
ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டு முடித்த பின்னர் எழுந்த திமுக துணைத் தலைவர் துரைமுருகன்,
எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக திமுக கோரிக்கை வைத்ததாக முதல்வர் எதை வைத்துக் கூறுகிறார்? அப்படி எந்தக்கோரிக்கையையும் திமுக வைக்கவில்லை என்றார்.
உடனே எழுந்த ஜெயலலிதா, ஊதிய உயர்வு தொடர்பாக திமுக தரப்பிலிருந்து கோரிக்கை எதையும் வைக்கவில்லை என்றுதுரைமுருகன் கூறுகிறார். ஆனால் திமுகவைச் சேர்ந்த புரசைவாக்கம் தொகுதி உறுப்பினர் ப.ரங்கநாதன் இதுதொடர்பாக 2வெட்டுத் தீர்மானங்களை கொடுத்திருந்தார் என்பதை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
தனது முதல் வெட்டுத் தீர்மானத்தில் உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ. 20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று ரங்கநாதன்கோரியிருந்தார்.
இன்னொரு தீர்மானத்தில், சட்டசபை உறுப்பினர்கள் தொகுதி அலுவலகத்திற்கு இலவச குளிர்சாதனப் பெட்டி, இலவச வண்ணத்தொலைக்காட்சி ஆகியவை வழங்க வேண்டும். இதுதொடர்பாக சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
ரங்கநாதனின் இந்த வெட்டுத் தீர்மானங்கள் குறித்தும், திமுகவைச் சேர்ந்த அவரின் கோரிக்கைகள் குறித்தும் துரைமுருகனின்கருத்தை அறிய விரும்புகிறேன் என்றார்.
ஜெயலலிதா இவ்வாறு கூறியபோது துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். மாறாக அதிமுகஉறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கருணாகரன் எழுந்து, இந்த ஊதிய உயர்வு இப்போது தேவையா என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, ஊதிய உயர்வு தேவையில்லை என்று உறுப்பினர் கருதினால், அதை முதல்வர் பொது நிவாரணநிதிக்கு வழங்கலாம் என்றார்.
இதுகுறித்து மேலிடத்தில் கேட்டுத் தெரிவிப்பதாக கருணாகரன் கூறியபோது, அதிமுக உறுப்பினர்கள் தரப்பில் பலத்த சிரிப்பொலிஎழுந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications