சினிமாவில் ஆபாசம்: திமுகவே காரணம்- ஜெ
சென்னை:
தமிழ் திரைப்படங்களில் வரலாறு காணாத அளவுக்கு ஆபாசம், வன்முறைக் காட்சிகள், விரும்பத்தகாத, அறுவறுக்கத்தக்ககாட்சிகள் இடம் பெறுவதற்கு, திமுகவினர் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ள திரைப்படத் தணிக்கைக் குழுவே காரணம்என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழ்த் திரைப்படங்களில் ஆபாச காட்சிகள், வன்முறைக் காட்சிகள் இடம் பெறுவதைத் தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கைஎடுத்துள்ளது என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, திரைப்படங்களில் ஆபாசக் காட்சிகள், வன்முறைக் காட்சிகள், விரும்பத்தகாத காட்சிகள்இடம் பெற்றால் அதைத் தடுக்க வேண்டியது, மத்திய அரசின் தணிக்கை குழுதான்.
ஆனால், அந்தத் தணிக்கை குழுவில் திமுகவினர்தான் அதிக அளவில் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே உறுப்பினர் தனதுகவலையை இங்கே தெரிவிப்பதற்குப் பதிலாக, தணிக்கை குழுவிடம் சென்று தெரிவிக்க வேண்டும்.
திரைப்படங்களில் இன்றைக்கு ஆபாச காட்சிகள், வன்முறைக் காட்சிகள், முகம் சுளிக்க வைக்கக் கூடிய காட்சிகள் அதிகம் இடம்பெறுவதற்கு, திமுகவினரே அதிக அளவில் உள்ள தணிக்கை குழுதான் காரணம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications