கிருஷ்ணா.. கிருஷ்ணா..: 5 முதல்வர்களை சந்தித்தும் பயனில்லை
சென்னை:
கிருஷ்ணா நதி நீர் தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்றது முதல் இதுவரை ஆந்திர மாநில முதல்வர்களாக இருந்த 5 பேரைசந்தித்து கோரிக்கை விடுத்தும் ஒரு பயனும் இல்லாத காரணத்தாலதான் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டதாகமுதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நான் முதல்வராகப் பதவியேற்றபோது, ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஜனார்த்தன ரெட்டியை சந்தித்து கிருஷ்ணா நீரைவிடுவிக்கக் கோரினேன். அதன் பின்னர் முதல்வரான விஜய பாஸ்கர ரெட்டியையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
அதன் பின்னர் மரியாதைக்குரிய என்.டி.ராமாராவை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். பின்னர் சந்திரபாபு நாயுடுவை 2 முறைசந்தித்து கோரிக்கை விடுத்தேன்.
தற்போதைய முதல்வர் ராஜசேகரரெட்டியையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று 2.1 டிஎம்சி நீரைவிடுவித்து உத்தரவிட்டார் ராஜசேகர ரெட்டி.
முதல்வர் என்ற முறையில், சென்னை நகர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடைவிடாது எனது முயற்சிகளைகடமையுணர்வுடன் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறேன். ஆனால் ஆந்திர அரசுதான் உரிய நீரை விடுவிக்காமல் உள்ளது.
இதன் காரணமாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்தது என்றார்.
மழைக்கு பலி: இறந்தோருக்கு ரூ. 50,000 உதவி
இதற்கிடையே சமீபத்திய மழை வெள்ளத்தில் சிக்கி பலியான 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவியைஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
மழை வெள்ளத்தில் சிக்கியும், இடி தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் இறந்த கண்ணம்மாள், சுந்தரம், தங்கமணி, தனக்கோடி,சாந்தி, விஜயக்குார், செல்லமுத்து, கஸ்தூரி பாய், பரமேஸ்வரி, சீதையம்மாள், வேலாயுதம் உள்ளிட்ட 12 பேரின் குடும்பங்களுக்குதலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications